ரஜினியுடன் கபாலி மற்றும் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. இந்தி ஆங்கில படங்களில் நடிக்கிறார். நடிப்பைத் தாண்டி இயக்குவதில் தனது திறமையைக் காட்டி இருக்கிறார்.ராதிகா ஆப்தே தற்போது ஒரு குறும்படம் பாம் ஸ்பிரிங்ஸ் என்ற குறும்படம் இயக்கி உள்ளார்.இதுதான் அவருக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.
இது குறித்து அவர் வெளிlயிட்ட பதிவில், 'நான் இயக்கிய குறும்படம் பாம் ஸ்பிரிங்ஸ். நானே எழுதியும் உள்ளேன் சர்வதேச அளவிலான ஷார்ட் பிலிம் விழாவில் தேர்வாகியிருக்கிறது. இது எனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது ' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.