டிவி படப்பிடிப்புகள் இன்று தொடங்கும் என்று குஷ்பூ அறிவித்தார். இந்நிலையில் அவர் பத்திரிகையாளர்கள் குறித்துப் பேசியது சர்ச்சை ஆகியிருக்கிறது.தொலைக்காட்சி சங்க செயலாளராக இருக்கிறார் குஷ்பூ. அவர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. பிரஸ்காரர்கள் வீடியோ, போட்டோ எடுத்துக் கிழிப்பதற்கு என்று எங்கியிருந்தாவது வருவான். உட்கார்ந்து கொண்டிருப்பான். கோவிட் தவிர்த்து பிரஸ்காரனுக்கு வேறு எந்தவொரு செய்தியுமே கிடையாது. நம்மைப் பற்றி ஏதாவது போடுவதற்குக் காத்துக் கொண்டிருப்பார்கள். அதனால் ப்ளீஸ் பத்திரம்' எனப் பேசி இருக்கிறார்.
குஷ்பூவின் இந்த ஆடியோ நெட்டில் பரவி பெரும் சர்ச்சையாகி உள்ளது இது பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் குஷ்பூ கூறியிருப்பதாவது:பத்திரிக்கையாளர்கள் பற்றி நான் மரியாதைக் குறைவாகப் பேசியதாகத் தகவல் வருகிறது. அதை யாரோ எடிட் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் நாங்கள் பேசிய இடத்தில் தான் இருந்தார்கள். யார் என்பது எனக்குத் தெரியும். அப்படிப்பட்ட மலிவானவர்களை எண்ணி வெட்கப்படுகிறேன்.
எனது 34 வருட சினிமா வாழ்வில் பத்திரிக்கையாளர்களை அவமரியாதையாக நான் பேசியது இல்லை. இது பற்றி அத்துறையில் இருப்பவர்களுக்குத் தெரியும். நான் பேசியது அந்த ஆடியோவில் தெளிவாக இல்லை. நண்பர்களுக்குள் பேசுவதுபோல் தான் அது அமைந்திருந்தது. யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் கேட்கும் இந்த மன்னிப்பே இதைப் பரப்பியவர்களுக்குத் தண்டனையாக இருக்கும்.
இவ்வாறு குஷ்பூ கூறி உள்ளார்.