தளபதி நடிகர் விஜய் பிறந்த நாள் வரும் 22ம் தேதி வருகிறது. ஏற்கனவே மாஸ்டர் படம் வெளிவரும் என்று எதிர்பார்த்து கொரோனா தடையால் ரிலீஸ் ஆகாமல் ஏமாற்றத்திலிருக்கும் ரசிகர்கள் விஜய் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட எண்ணியிருந்தனர். அதற்கான ஏற்பாடுகளும் செய்து வருகின்றனர். ஆனால் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு, ஊரடங்கு நீட்டிப்பு போன்றவற்றால் விஜய்யின் பிறந்த நாளில் யாரும் விழா கொண்டாட வேண்டாம் என்று மன்றத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸியிடம் இது குறித்து விஜய் தெரிவித்திருக்கிறாராம். பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யவும் விஜய் கேட்டிருக்கிறாராம். இதையடுத்து விஜய் மக்கள் இயக்கத்தினருக்குத் தலைமை மன்றத்திலிருந்து தொலைப்பேசி மூலம் அழைத்து தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் ரசிகர்கள் அதிகம் கூடினால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பிருக்கிறது எனவே விழா எதுவும் வேண்டாம் என்று கூறப்பட்டிருக்கிறது.