இயக்குனர் பாரதிராஜா படங்களுக்கு நிழல்கள் முதல் பொம்மலாட்டம் வரை ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கண்ணன். இவரைத் தனது கண்கள் என்று பாரதிராஜா அடிக்கடி புகழ்வார். பசுமைகளை கேமிராவுக்குள் படம்பிடித்தது திரையில் தென்றலாக வீசச் செய்த கண்ணன் சற்று முன் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 69.சமீபத்தில் கண்ணனுக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பிறகு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த உடல்நிலை தேறாமல் இன்று மதியம் 2 மணி அளவில் மரணம் அடைந்தார்.