பிரபாஸ் ஜோடியாக சாஹோ படத்தில் நடித்தவர் ஷ்ரத்தா கபூர். இந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் பிரபல இந்தி வில்லன் நடிகர் சக்தி கபூரின் மகள் ஆவார்.
பாலிவுட், டோலிவுட்டில் படப்பிடிப்பு நடத்த அம்மாநில அரசுகள் அனுமதி வழங்கி இருக்கின்றன. இந்நிலையில் மகளை ஹூட்டிங் அனுப்ப முடியாது என்று தெரிவித்திருக்கிறார் சக்திகபூர்.
அவர் கூறும்போது, கொரோனா தொற்று தீவிரம் இன்னும் அடங்காத நிலையில் என் மகளையோ அல்லது நானோ எப்படி ஷூட்டிங் செல்ல முடியும். படப்பிடிப்புக்கு அனுப்பிவிட்டு எப்போது தொற்று வருமோ என்று பயந்துக்கொண்டிருக்க முடியாது. கட்டுப்பாடுகள் விதிமுறைகள் பின்பற்றப்பட்டாலும் தொற்றை முழுமையாகத் தவிர்க்க முடியும் என்று தோன்றவில்லை. பயத்திலேயே படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது. ஆஸ்பத்திரி, சிகிச்சை என்று அலைய முடியாது என்றார் சக்தி கபூர்.