தூக்கு போட்டு தற்கொலை செய்த சுஷாந்த் சிங் வீட்டில் போலீஸ் சோதனை..

by Chandru, Jun 14, 2020, 16:50 PM IST

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துப் புகழ் பெற்றார். ஏற்கனவே சிச்சோர் படத்தில் ஷ்ரத்தா கபூருடன் நடித்திருந்தார். கை போ செ படத்தின் மூலம் கடந்த 2012ம் ஆண்டு சுஷாந்த் சிங் ஹீரோவாக அறிமுகமானார். அதுவரை பெரிய அளவில் பேசப்படாமல் இருந்த சுஷாந்த் கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கைப் படமான எம் எஸ்.தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி படத்தில் தோனி வேடம் ஏற்ற பிறகு பரபரப்பானார். அப்படம் சுஷாந்த்துக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தில் பெசரா படத்திலும் சுஷாந்த் நடித்திருந்தார். இது தி பால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் ஹாலிவுட் படத்தின் ரீமேக் ஆக உருவானது. முன்னதாக டிவி தொடர்களிலும் சுஷாந்த் நடித்திருக்கிறார். இப்படம் இன்னும் திரக்கு வரவில்லை.


பீகார் தலைநகர் பாட்னாவில் பிறந்த சுஷாந்த் நடிப்பதற்காக மும்பை வந்து தனியாக வீடு எடுத்துத் தங்கி இருந்தார். இவரது தங்கை மித்து சிங் மாநில அளவிலான கிரிக்கெட் வீரர் ஆவார். பொறியியல் பட்டம் பெற்றவர். மும்பை பாந்த்ரா பகுதி வீட்டில் சுஷாந்த தூக்கு இன்று போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். அவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது சில மருந்து சீட்டுக்கள் கிடைத்தன. இதனால் சுஷாந்த் உடல் நலக் குறைவாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு தான் இவரிடம் மேனஜராக பணியாற்றிய திஷா சலைன் என்பவர் தனது குடியிருப்பில் 14வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அதற்கு சுஷாந்த் அதிர்ச்சி தெரிவித்திருந்தார். அடுத்த சில நாட்களில் சுஷாந்த தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளித்திருக்கிறது.

சுஷாந்த் ரெஹிய சக்ரவர்த்தி என்பவருடன் நெருக்கமாகப் பழகி வந்தார். இருவரும் பலவேறு இடங்களில் ஜாலியாக சுற்றித் திரிந்தனர். ஆனால் இருவரும் காதலிப்பதாக இதுவரை சொன்னதில்லை என்றாலும் அவர்கள் நெருக்கமாக இருக்கும் படங்கள் தற்போது இணைய தளத்தில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது.சுஷாந்த் தற்கொலை பற்றி எந்த கடிதமும் கிடைக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.சுஷாந்த் சிங் மரண செய்தி அறிந்து பாலிவுட் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். நடிகர் அக்ஷய்குமார், அபிசேக் பச்சன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.


More Cinema News