Advertisement

ரஜினியின் அண்ணாத்த பொங்கலுக்கும் ரிலீஸ் இல்லை?

கொரோனா தொற்று ஊரடங்கு பல விதத்திலும் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரிய படங்கள் முதல் சிறிய படங்கள் வரை வெளிவர முடியாமல் முடங்கி இருக்கிறது.
ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தைச் சிவா இயக்கி வருகிறார். குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் நின்றது. 3 மாதம் ஆகியும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. முன்னதாக இப்படம் தீபாவளி ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது பின்னர் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. தற்போது அதுவும் முடியாத சூழல் உள்ளதால் அடுத்த ஆண்டு கோடையில் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது.