விஜய் சேதுபதி நடித்த, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் மற்றும் ஓரிரு தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் நிஹாரிகா. இவர் தெலுங்கு நடிகர் நாகேந்திர பாபுவின் மகள். மேலும் சிரஞ்சீவி உறவுக்கார பெண்.நிஹாரிகாவும் நடிகர் ஒருவரும் காதலிப்பதாகக் கூறப்பட்டு வந்தது.
ஆனால் அது வெறும் புரளியாகிவிட்டது. தனது சாதியைச் சேர்ந்த ஒருவரை மணக்கிறார் நிஹாரிகா. அவர் பெயர் சைதன்யா ஜொன்னலகட்டா. பட்டதாரியான இவருடன் கடந்த சில காலமாகவே நிஹாரிகா பழகி வந்தாராம். இவர்கள் இருவர் திருமண நிச்சயதார்த்தமும் சமீபத்தில் நடந்தது, குடும்பத்தினர் மட்டுமே இந்நிகழ்சியில் பங்கேற்றனர். இதுபற்றிய விவரம் வெளியிடப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.