தம்பியை ஹீரோவாக்கும் பிரபல நடிகர்..

Ragava Lawrences brother make his debut as an actor

by Chandru, Jun 21, 2020, 15:45 PM IST

பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக முன்னணி நடிகர்கள் வரிசையில் ஒருவராக இடம் பிடித்திருப்பதுடன் இயக்குனராகவும் நடன இயக்குனராகவும் வெவ்வேறு பரிமாணத்தில் கலக்குகிறார்.லாரன்சின் தம்பி எல்வின் இவரும் நடிகர் ஆக வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசையில் இருக்கிறார். லாரன்ஸ் நடித்த காஞ்சனா 2 படத்தில் சில்லாட்ட பில்லாட்டா.. பாடலுக்கு எல்வின் நடனம் ஆடி அசத்தினார். அவரது ஆசையை தற்போது நிறைவேற்றி இருக்கிறார் லாரன்ஸ்.


இது பற்றி அவர் வெளியிட்டுள்ள மெசேஜில், என் தம்பியின் ஒவ்வொரு பிறந்த நாளைக்கும் அவனை அசத்தவேண்டும் என்று பரிசுகளைத் தேர்வு செய்து அளிப்பேன். இம்முறை அவனது நீண்ட நாள் ஆசையான ஹீரோ ஆசை நிறைவேறுகிறது. எல்வின் நடிக்கும் படத்தை ராஜா இயக்குகிறார் என்றார் ராகவா லாரன்ஸ். இப்படத்தை ராகவேந்திரா புரொடக்‌ஷன் தயாரிக்கிறது.

You'r reading தம்பியை ஹீரோவாக்கும் பிரபல நடிகர்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை