திருமலை தென்குமரி,உன்னைப் போல் ஒருவன்,பட்டிக்காட்டுப் பொன்னையா, அரங்கேற்றம், புதிய வார்ப்புகள் போன்று 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் உஷா ராணி. இவர், தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். மலையாள திரைப்பட இயக்குனர் என்.சங்கரன் நாயர் என்பவரை மணந்துகொண்டார்.
சமீபகாலமாக உஷாராணி சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனில்லாமல் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 65.உஷாராணி மறைவுக்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.