விஜயகாந்த் நடிப்பில் ஆர்.அரவிந்தராஜ் இயக்க ஆபாவாணன் தயாரித்த படம் 'ஊமைவிழிகள்' . படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. திரைப்பட கல்லூரி மாணவர்கள் இணைந்து இப்படத்தில் பணியாற்றியிருந்தனர். படத்தின் எடிட்டராக ஜி.ஜெயச்சந்திரன் அறிமுகமாகி வித்தியாசமான கோணங்களில் விறுவிறுப்பான எடிட்டிங் செய்திருந்தார். இது அவருக்கு பாராட்டு பெற்றுத் தந்தது.
அதன்பிறகு சுமார் 150 படங்களுக்கு எடிட்டராக ஜெயச்சந்திரன் பணியாற்றினார்.
கொரோனா ஊரடங்கில் இருந்த ஜி.ஜெயச்சந்திரனுக்கு (வயது 58)இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் மரணம் அடைந்தார். இவர் பழம்பெரும் திரைப்பட எடிட்டர் வி.கோவிந்த சாமியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.