1921 மலபார் கிளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட படமாக நடிகர் பிருத்விராஜ் மற்றும் இயக்குனர் ஆஷிக் அபு ஆகியோர் அடுத்து வாரியம் குன்னன் என்ற படத்தில் இணைவதாக அறிவித்தனர். இப்போது, அப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவரான ரமீஸ் தற்காலிகமாகப் படத்திலிருந்து விலகியுள்ளார்.
வாரியம் குன்னனின் இயக்குனர் ஆஷிக் அபு இந்த செய்தியைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ரமீஸின் அரசியல் நிலைப்பாட்டை ஏற்கவில்லை என்றும் அவர் கூறினார். ரமீஸின் முடிவிற்குக் காரணம் அவரது பழைய பேஸ்புக் பதிவுகள் தான், இதன் மூலம் அவர் தனது தீவிர இஸ்லாமிய மற்றும் தவறான கருத்துக்களை வெளிப்படுத்தினார். அவை சமூக ஊடகங்களில் வைரலாகி, பலர் அதற்குக் கண்டனம் தெரிவித்தனர் . இதையடுத்து ரமீஸ் தனது பழைய பதிவுகளை நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்டார்.
இயக்குனர் ஃபேஸ்புக்கில் ஆஷிக் அபு கூறியிருப்பதாவது: "ரமீஸின் அரசியல் நிலைப்பாட்டை நான் தனிப்பட்ட முறையில் ஏற்கவில்லை. அநேகமாக, அவர் என்னுடன் உடன்பட மாட்டார். வாரியம் குன்னன் படம் குறித்த விவாதங்கள் மற்றொரு இயக்குனருடன் சில ஆண்டுகளாக முன்னேறி வருகின்றன. ரமீஸ் பற்றி எனக்குத் தெரிய வந்தது மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு முன்பு தான். முந்தைய கட்டத்திலிருந்து ஆராய்ச்சி மற்றும் கலந்துரையாடல்களின் ஒரு பகுதியாக இருந்தவர். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, ஒரு விளக்கம் கோரப்பட்டது, மேலும் இந்த குற்றச்சாட்டுகள் சிலவற்றில் அவர் சமூக ஊடகங்களில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் எனக் கூறினார்.