2 உயிர்கள் போலீசாரால் கொல்லப்பட்டதற்கு நீதி எங்கே ? கமல்ஹாசன் காட்டமான அறிக்கை..

சாத்தான்குளம் தந்தை மகன் அடித்துகொல்லப்பட்ட வழக்கில் போலீஸார் மீது என்ன நடவடிக்கையை அரசு எடுக்கப்போகிறது என கமல்ஹாசன் கேட்டிருக்கிறார், இதுகுறித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
சாத்தான்குளத்தில் நிகழ்ந்திருக்கும் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகிய இருவரின் மரணமும் அதனைச் சுற்றி நிகழ்ந்திருக்கும் மனித உரிமை மீறல்களும், சட்ட மீறல்களும் இந்நிலை நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் நிகழக்கூடும் என்ற அச்சத்தை நம்முடைய விதைத்திருக்கிறது. ரத்தம் சொட்டச் சொட்ட இருவரையும் தாக்கும் மூர்க்கத் தனம் கொலை பாதகச் குற்றம். அதைச் செய்தவர் எவராக இருந்தாலும் அந்த தவறுக்காகத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கின்ற குரல்களுக்கு இடையில் இரண்டு காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதைப் பார்க்கும் போது அரசு இந்த விஷயத்தில் துளிகூட உண்மைத் தன்மையைக் கண்டறிய முயலவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

நான் தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் நினைத்தால் இரண்டு கைதிகளைக் காவல் நிலையத்தில் இருந்து சிறைச்சாலைக்கு மாற்றிவிட முடியுமா? அவ்வாறு செய்ய எத்தனை துறைகள் அவர்களுக்கு உதவி இருக்க வேண்டும். எத்தனை பேர் உடன் இருந்திருக்க வேண்டும் அந்த உண்மைகளை ஆராயாமல் பெயரளவில் எடுக்கப்படும் நடவடிக்கை எதற்கும் உதவாத ஒன்று என்பது அரசுக்குப் புரியவில்லையா? அல்லது இது போதும் என்று அரசு நடக்கிறதா? இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவியும் நிவாரணம் தேவைதான் ஆனால் அதை மட்டும் அவசரமாக அறிவித்து விட்டு இந்த கொலைகளை முதல்வர் நடந்து விடக்கூடாது நிதி உதவியை விட இரண்டு உயிர்களுக்கு நீதி தேவை.

இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். கொலையைச் செய்தவர்கள் அதற்குத் துணை நின்றவர்கள் கைக்கட்டி வேடிக்கை பார்த்தவர்கள் இதை மறைக்க முயன்றவர்கள் எனப் பலருக்கு இந்த கொலையில் பங்கு உண்டு. இரண்டு அப்பாவிகளின் குருதி படிந்த காவல்துறையை சுத்தம் செய்ய அரசு என்ன செய்யப்போகிறது. இவை அனைத்திற்கும் மேலாகக் காவல் துறையின் கொலைகளைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அரசும் அந்த காவல்துறையை ஏவி மக்களை நசுக்கும் முதல்வரும் இதில் முதல் குற்றவாளிகள்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசின் அடக்குமுறையைச் செயல்படுத்தும் கரமாகக் காவல் துறை செயல்பட்டு 13 உயிரைக் குடித்தது யார்? எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை அரசு அலட்சியம் காட்டி மனித உயிர்களின் மதிப்பை உரிமைகளையும் காற்றில் பறக்க விட்டது. இப்போது அதே காவல்துறையின் கரங்கள் இரண்டு உயிர்களைக் குடித்து விட்டது. அரசு தன் விசுவாசமான கரத்தை காக்கும் வேலையைச் செய்யப் போகிறதா அல்லது சரியான சரியானதைச் செய்யப் போகிறதா?
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?