நடிகைகள் வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன் மோதல்.. போதும் இத்தோடா நிறுத்திக்குவோம் சண்டை முற்றியதும் கப்சிப்..

Vanitha Vijayakumar slams Lakshmi Ramakrishnan

by Chandru, Jun 30, 2020, 13:40 PM IST

நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணம் ஆகும். ஏற்கனவே நடந்த திருமணங்கள் விவாகரத்தில் முடிந்தது. அதேபோல் பீட்டர் பால்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது. வனிதா, பீட்டர் திருமணம் நடந்ததையடுத்து பீட்டரின் முதல் மனைவி போலீஸில் புகார் அளித்தார்.

இந்நிலையில் நடிகை லட்சுமி ராம கிருஷ்ணன் வனிதா திருமணம் பற்றி விமர்சித்திருந்தார். படித்தவர், சட்டம் தெரிந்தவர்கள் இப்படிச் செய்யலாமா. ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தையும் பெற்றிருந்தும் சட்டப்படி விவாகரத்து பெறாமல் எப்படி திருமணம் செய்ய முடியும் என்று கேட்டிருந்தார்.லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த விமர்சனத்தைக் கண்டு கோபம் அடைந்த வனிதா, நான் படித்திருக்கிறேன் எனக்குச் சட்டம் பற்றித் தெரியும். இது எனது தனிப்பட்ட வாழ்க்கை அதில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை. இது நீங்கள் நடத்தும் ஷோவுமல்ல. அப்பாவிகளை அழைத்து வந்து நீங்கள் ஜட்ஜ் போல் பேசிக் கொண்டிருந்தீர்கள். அதற்கான சம்பளமும் வாங்கினீர்கள்.

இப்படி ஒரு விஷயத்தில் நான் தெரிந்தோ தெரியாமலோ ஈடுபட்டுவிட்டேன். இதை நாங்கள் தீர்த்துக்கொள்வோம் என சக்கட்டு மேனிக்குப் பதில் அளித்தார் வனிதா.
வனிதாவின் பதிலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன், மறுமணம் பற்றி எனது கருத்தைச் சொல்லவே எனது எண்ணத்தை வெளியிட்டேன். அதற்காகத் தனிப்பட்ட முறையில் தாக்குவதை ஏற்கமுடியாது. நான் உன்னிடம் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன். இத்துடன் நம் விவாதத்தை நிறுத்திக்கொள்வோம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>



அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை