Advertisement

பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பிரகாஷ்ராஜ்..

நடிகர் பிரகாஷ்ராஜ் கொரோனா ஊரடங்கின் போது பலருக்கு உதவிக்கரம் நீட்டினார். இன்றும் அப்பணியைத் தொடர்ந்து வருகிறார்.கர்நாடகாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் அவர்கள் தங்கள் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குத் தனது அறக்கட்டளை மூலம் தொடர்பு கொண்டு அப்பகுதிலேயே படிப்பைச் சொல்லித்தரும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். பல்வேறு மாணவ, மாணவிகள் இந்த வகுப்பில் இணைந்து கற்கத் தொடங்கி இருக்கின்றனர்.