சியான் விக்ரம் அவரது மகன் துருவ் இருவரும் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் படத்தில் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். ஏற்கனவே ஆதித்ய வர்மா படத்தில் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிவிட்டாலும் தந்தையுடன் முதன்முறையாக இப்படத்தில் இணைவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்துக்கு அனிரூத் இசை அமைக்கிறார்.
இதுபற்றி கார்த்திக் சுப்பராஜ் கூறும் போது, விக்ரம் படம் இயக்க வேண்டு மென்று நீண்ட நாள் ஆசை. தந்தை, மகன் கதை ஒன்றை அவரிடம் சொன்னேன் அவருக்குப் பிடித்திருந்தது. துருவ் இதில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றேன். அவரும் ஒப்புக் கொண்டார். இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கதையல்ல, தானாக அமைந்தது என்றார்.
கார்த்திக் சுப்பராஜ் தற்போது தனுஷ் நடிக்கும் ஜெகமே தந்திரம் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக இருக்கிறார். அதன்பிறகு கொரோனா தடை முடிந்தவுடன் விக்ரம் பட ஸ்கிரிப்ட் பணி தொடங்க திட்டமிட்டிருக்கிறார்.