ரஹ்மான் பாடலை இசைத்த பார்வையற்ற சிறுமிக்கு பரிசு.. கீபோர்டில், தும்பி துள்ளல்..

AR.Rahmans Thumbi Thullal Song played on keyboard by Blind Girl shahana

by Chandru, Jul 3, 2020, 15:51 PM IST

சீயான் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா, அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் "தும்பி துள்ளல்" என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. சில நிமிடத்திலிருந்தே தற்போது 3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகிறது.

தும்பி துள்ளல் பாடலை கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளி சிறுமி சஹானா கீ-போர்டில் மிக அழகாகப் பாடலை வாசித்து டிவிட்டரில் பகிர்ந்திருந்தார். அவரின் கீ-போர்டில் வாசித்த பாடல் வந்த சற்று நேரத்திலேயே எல்லாராலும் பாராட்டப்பட்டது.
பிறவியிலேயே கண்பார்வையற்ற சிறுமி சஹானா ஜீ தமிழ் சேனலில் சரிகமபா நிகழ்ச்சியில் 2வதாக வந்தவர். சஹானாவின் வீடியோவை கவனித்த ஏ.ஆர் ரஹ்மான் டிவிட்டரில் ஸ்வீட் என ரீ ட்வீட் செய்து பாராட்டியிருந்தார்.உடனே படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தனது பட நிறுவனம் சார்பாகவும், இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சார்பாகவும் சஹானாவிற்கு விலை உயர்ந்த மைக் உள்ளிட்ட ஸ்டுடியோ செட்டப்பை பரிசாக அளித்துப் பாராட்டினார்.

You'r reading ரஹ்மான் பாடலை இசைத்த பார்வையற்ற சிறுமிக்கு பரிசு.. கீபோர்டில், தும்பி துள்ளல்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை