கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதாக கூறி போடப்பட்டுள்ள ஊரடங்கு பலரின் வாழ்வாதாரத்தைப் பறித்திருக்கிறது, பலர் வேலை இழந்து வருமானம் இழந்து உணவுக்கு வழியில்லாமல் நிற்கிறார்கள்.கேரளா மாநிலம் வள்ளிக்கோட் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சு. 36வயதாகும் இவர் மேடை நாடகங்களில் கடந்த 15 வருடமாக நடித்து வருகிறார். ஊரடங்கால் கடந்த பல மாதமாக நாடகங்கள் நடக்கவில்லை.
இதனால் வருமானம் இழந்தார். நாடகத்தில் நடித்துவிட்டு இரவு வீட்டுக்குத் திரும்புவதற்காகக் கேரள மக்களின் கலைக் கழகத்திடம் கடன் பெற்று ஒரு ஆட்டோ வாங்கியிருந்தார், தற்போது நாடகங்கள் இல்லாமல் வருமானம் இன்றி இருப்பதால் அவரே காக்கிச் சட்டை அணிந்து ஆட்டோ டிரைவராக மாறிவிட்டார்.
தனது ஆட்டோ வை ஓட்டி பிழைப்பு நடத்தும் மஞ்சு சக தொழிலாளர்களுக்கும் உதவுகிறார். அவரது தன்னம்பிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.