பாகுபலியை விட 10 மடங்கு அதிக பிரமாண்ட படம்.. ராஜமவுலி புதிய படம் பற்றி மதன்கார்க்கி..

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிக்க ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்துக்கு வசனம் எழுதினார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. தற்போது ராஜமவுலியுடன் மீண்டும் ஒரு பிரமாண்டத்துக்குக் கைகோர்த்திருக்கிறார். ராஜமவுலி இயக்கும் படம் ஆர் ஆர் ஆர் . இப்படத்திற்குத் தமிழில் ரதம் ரணம் ரவுத்திரம் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகும் இப்படத்துக்கும் மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். அவர் கூறியதாவது:
ஆர் ஆர் ஆர் (தமிழில் ரதம் ரணம் ரவுத்திரம்) உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தேச பக்தியுடன் கூடிய படமாக உருவாகிறது. பாகுபலிக்கு வசனம் எழுதியது போல் சவால் இப்படத்தில் எனக்கு இல்லை. பாகுபலி வசனத்துக்காக கிலிக்கி என்ற ஒரு புதிய மொழி உருவாக்கினேன்.

இயக்குனர் ராஜமவுலியை பொருத்தவரை வசனங்கள் சிறியதாக பவர் புல்லாக இருக்க வேண்டும் என்பார். ஆர் ஆர் ஆர் படத்தைப் பொருத்தவரை தேசபக்தி புதிரான விதத்திலும் இதுவரை பார்க்காத விஷூவலுடனும் மற்றும் எதிர்பாராத காட்சிகளுடனும் அதாவது பாகுபலியை விட 10 மடங்கு அதிக பிரமாண்டத்துடனும் சொல்லப்படுகிறது. இப்படம் மீண்டும் ரசிகர்களை தியேட்டர்களை நோக்கித் திருப்பும் என்றார் மதன் கார்க்கி.
ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய்தேகன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds