'தடயம்: முதல் அத்தியாயம்' என்ற படத்தை எழுதி இயக்கிய மணி கார்த்திக். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சுமார் 7 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர் சினிமாவால் ஈர்க்கப்பட்டு இயக்குனராக முயற்சி செய்து வருகிறார். சில குறும் படங்கள் இயக்கி முடித்த பின்னர் தனித்தன்மை கொண்ட சுவாரஸ்யமான திரைக்கதை ஒன்றைச் செய்யத் திட்டமிட்டவர் தடயம் முதல் அத்தியாயம் படத்தை இயக்கி உள்ளார். உளவியல் குற்றங்களை பின்னணியாக வைத்து அமைக்கப்பட்ட ஒரு சைக்காலஜிகல் த்ரில்லராக உருவாகி இருக்கிறது.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது,தடயம் முதல் அத்தியாயம் போலிஸ் அதிகாரியாக வரும் மதிவாணனைச் சுற்றி நடக்கும் தொடர் கொலைகள் அதில் கிடைக்கும் திடுக்கிடும் தடயங்கள் அவரை மேலும் முன்னோக்கி நகர்த்த அதில் அவர் சந்திக்கும் இன்னல்கள், இறுதியில் எதிரியின் சதியை முறியடித்தாரா என்று முதல் அத்தியாயம் தொடர்கிறது. தமிழில் சைக்காலஜிகல் (psychological) த்ரில்லர் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்குத் தடயம் ஒரு நல்ல விருந்தாகும். தடயம் முதல் அத்தியாயத்தின் காட்சிகள் அனைத்தும் கொடைக்கானல் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது . கதையின் நாயகனாக பென்குயின், சிந்துபாத் மற்றும் சேதுபதி படங்களில் நடித்த லிங்கா, 'மதிவாணன்' கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு - சுகுமாரன் சுந்தர் , படத் தொகுப்பு-விஐய் அன்டரிவ்ஸ், இசை - ஜோன்ஸ் ரூபர்ட் , ஒலி வடிவமைப்பு - அருண் காந்த், கலரிஸ்ட் - அனில் கிரிஷ் என்று அனைவரும் தங்களது திறமையை விதைத்திருக்கிறார்கள். தடயம் முதல் அத்தியாயம் விறுவிறுப்பான ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக ரசிகர்கள் மத்தியில் வலம் வரும் என்பதில் எங்கள் படக்குழு நன்னம்பிக்கை கொண்டுள்ளோம். உங்கள் ஆதரவு தொடர்ந்து கிடைக்கவும் வேண்டுகிறோம் என்றார்.இதில் லிங்காவுடன் விஜய் ஆனந்த் TR, கார்த்திகேயன் அய்யாச்சாமி, ராஜா பழனி வேல், சுரேஷ் PT, கலங்கல் தினேஷ் மோகன் பிரதீப், வெங்கடேஷ் G, மகேஷ்வரன் E, கலங்கல்'தினேஷ், சேதுபதி நடித்திருக்கின்றனர்.