டாப்ஸியின் துணிச்சலுக்கு நடிகை பாராட்டு..

Taapsee Pannus Thappad Gives Actress Lakshmi Manchu Proud Movement

by Chandru, Jul 8, 2020, 13:01 PM IST

ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற படங்களில் காதல் நாயாகியாக நடித்துக் கொண்டிருந்த டாப்ஸி தற்போது பாலிவட்டில் எதிர்நீச்சல் போட்டு மாறுபட்ட படங்களில் நடித்து பாராட்டுக்களை அள்ளிக்கொண்டிருகிறார். அவர் நடித்திருக்கும் தப்பாட் படம் அவருக்கு ரசிகர்களிடமிருந்து மட்டுமல்லாமல் நட்சத்திரங்கள் மத்தியிலிருந்தும் பாராட்டைப் பெற்றுத் தந்துகொண்டிருக்கிறது.

காற்றின் மொழி, கடல் போன்ற தமிழ் மற்றும் பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்திருப்பதுடன் படங்களும் தயாரித்திருப்பவர் லட்சுமி மஞ்சு, இவர் தெலுங்கில் டாப்ஸியின் அறிமுகப் படமான ஜும்மந்தி நாத் படத்தைத் தயாரித்தார்.
டாப்ஸி நடித்திருக்கும் தப்பாட் இந்தி படத்தைப் பார்த்த லட்சுமி மஞ்சு அவருக்கு வாழ்த்து பகிர்ந்திருக்கிறார். அவர் கூறும்போது, தப்பாட் படத்தைப் பார்த்த பின் நான் டாப்ஸியின் ரசிகராகி விட்டேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு தப்பாட் படத்தைப் பார்த்தேன், இந்த படத்தைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் பற்றி ஒரு குறிப்பை எழுத என்னால் கொண்டு வர முடியவில்லை. இது இந்தியப் பெண்ணாக, ஒரு பெண்ணாக நான் கற்பித்த எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கியது.

சில சமூகத்திலிருந்து வந்தவர்கள், எப்போதும் செய்யக் கூடாத மற்றும் செய்ய வேண்டியவை இருந்தன. தப்பாட்டைப் பார்க்கும் போது ஒவ்வொரு கதாபாத்திரமும் என் ஆழ் மனதின் ஒரு பகுதியாக இருப்பதைப் போல உணர்ந்தேன், அதே கேள்வியை நானே என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். படம் பார்த்து முடித்தவுடன் உடைந்துவிட்டேன், அது என்னைப் பற்றியும், என்னைச் சுற்றியுள்ள மக்களுக்கும் நான் வைத்திருக்கும் சுய மரியாதையையும் நான் எப்படிப் பார்க்கிறேன் என்பதை மறுபரிசீலனை செய்ய வைத்தது.

இவ்வாறு லட்சுமி மஞ்சு கூறி உள்ளார். லட்சுமிக்குப் பதில் அளித்த டாப்ஸி,நான் பயணத்தைத் தொடங்கியதிலிருந்து இப்போது நான் உங்களைப் பெருமைப்படுத்தக் கூடியது வரை, நாம் ஒரு முழு வட்டம் வந்ததைப் போல உணர்கிறோம். உங்களுக்கு என அன்பான கட்டி அணைப்பு எனத் தெரிவித்திருக்கிறார்.

You'r reading டாப்ஸியின் துணிச்சலுக்கு நடிகை பாராட்டு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை