நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். இவர் கனடாவில் திரைப்படத் துறை பற்றிப் படித்து வருகிறார். இந்நிலையில் விஜய் நடித்த மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிட்டோ தயாரிக்கும் படம் மூலம் திரையுலகுக்கு ஜேசன் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின அதற்கு சேவியர் பிரிட்டோ பதில் அளித்தார். அவர் கூறும்போது.ஜேசன் சினிமாவிற்கு வருவது பற்றி இன்னும் பேச்சு எதுவும் தொடங்கவில்லை. தற்போது அவர் கனடா நாட்டில் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். படிப்பு முடிந்த பிறகே அவரது எதிர்கால திட்டம் என்ன என்பதை முடிவு செய்வார் என்றார் சேவியர்.
இதற்கிடையில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. எனவே படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்ய இருப்பதாக பேச்சு எழுந்துள்ளது. அதைப் படத் தரப்பு மறுத்திருக்கிறது மாஸ்டர் படம் ஒடிடியில் ரிலீஸ் கிடையாது தியேட்டரில் தான் தீபாவளி அல்லது பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று விளக்கம் அளித்திருக்கிறது. மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.