ஃபாய்பிரண்டை நினைத்து காதல் ஏக்கத்தில் தவிக்கும் விஜய், அஜீத் நடிகை.. கட்டிப்பிடித்த படத்தை வெளியிட்டு மெசேஜ்..

விஜய்யின் ஜில்லா, அஜீத்துடன் விவேகம் உள்ளிட்ட கோலிவுட்டில் எல்லா ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார் காஜல் அகர்வால். அடுத்து கமலுடன் இந்தியன்2ம் பாகம், விஜய்யுடன் துப்பாக்கி 2ம் பாகம் படங்களில் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கில் மும்பையில் உள்ள தனது வீட்டில் முடங்கிக் கிடக்கும் காஜல், வீட்டு வேலை செய்வது, உடற்பயிற்சி செய்வது என்று கடந்த 100 நாட்களுக்கும் மேலாகப் பொழுதைக் கழித்து வருகிறார். தற்போது இவர் காதல் ஏக்கத்தில் தவிப்பதாகக் கூறப்படுகிறது.

திடீரென்று காஜல் அகர்வால் தனது ஃபாய் பிரண்டும், தெலுங்கு பட ஹீரோவுமான பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸை கட்டிப்பிடித்திருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அவரிடம் தனது ஏக்கத்தைப் பகிர்ந்து கொண்டார். உன்னை ரொம்பவே மிஸ் செய்கிறேன்என காஜல் மெசேஜில் குறிப்பிட்டுள்ளார்.காஜலின் ஏக்கமான மெசேஜை பார்த்த பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ், ரொம்ப மிஸ் செய்கிறேன். நான் உன்னை வந்து பார்க்க முடியாத நிலையில் நீ இப்படிச் சொல்லாதே என ஆறுதலான பதில் அளித்திருக்கிறார்.இவர்கள் இருவரும் சிட்டா மற்றும் கவசம் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர்.

காஜல், ஸ்ரீனிவாஸ் இருவரின் மெசேஜை பார்த்த ரசிகர்கள், உங்களுக்குள் என்ன நடக்கிறது. கொரோனா ஊரடங்கு அதுவுமாக இருவரும் இப்படி ஒருவரையொருவர் பார்க்கத் துடித்தால் என்ன அர்த்தம், இருவருக்கும் காதல் சடுகுடு நடக்கிறதா? அப்படியென்றால் ஓப்பனாகச் சொல்ல வேண்டியதுதானே என கமென்ட் பகிர்ந்து இருவரையும் உசுப்பி விட்டுள்ளனர்.காஜல் அகர்வாலுக்கு நிஷா அகர்வால் என்ற தங்கை உள்ளார். இவரும் தமிழில் இஷ்டம் என்ற படத்தில் மற்றும் ஒன்றிரண்டு தெலுங்கு படத்திலும் நடித்தார். ஆனால் அவர் கடந்த 2013ம் ஆண்டே கரண் வலேச்சா என்பவரை மணந்து கொண்டு இல்லறத்தில் செட்டிலானார், ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் ஆகிவிட்டார். ஆனால் காஜல் அகர்வால் இன்னமும் படங்களில் நடித்து வரும் நிலையில் அவரிடம். உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்ட வண்ணமிருக்கின்றனர். இந்த நிலையில் அவர் பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாசை மிஸ் செய்கிறேன் என்று புகைப்படத்துடன் பதிவிட்டிருப்பது இருவருக்கும் இடையேயான காதல் கிசுகிசுவை ஊதி பெரிதாக்கி இருக்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?