தளபதி நடிகர் விஜய் தனது 64வது படமாக மாஸ்டர் படத்தை நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தை லோலேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு ரிலீஸ் ஆக உள்ளது. விஜய் அடுத்து தனது 65 படமாக ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. காஜல் அகர்வால் கதாநாயகி ஆக நடிக்கிறார். இப்படத்துக்கு விஜய் 100 கோடி சம்பளம் கேட்டதாகத் தெரிகிறது. இது ரஜினிகாந்த் தற்போது அதே நிறுவனத்தில் நடிக்கும் அண்ணாத்த படத்துக்காக அவர் பெறும் சம்பளத்தை விட அதிகமாம்.
கொரோனா ஊரடங்கால் படங்கள் தியேட்டரில் வெளியானாலும் எதிர்பார்க்கும் அளவுக்கு வசூல் செய்யாது என்று கணிக்கப்படுகிறது. இதனால் விஜய்யின் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளும்படி தயாரிப்பு நிறுவனம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. விஜய்யும் 20 கோடி சம்பளம் குறைப்பதாகக் கூறி இருக்கிறார், ஆனால் மேலும் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று கேட்டதற்கு மறுத்து விட்டாராம்.கொரோனா ஊரடங்கால் ஏற்கனவே நடிகர்கள் சிலர் தங்கள் சம்பளத்தைக் குறிப்பிட்ட சதவீதம் குறைத்துக் கொள்வதாக ஏற்கனவே அறிவித்திருக்கின்றனர். மலையாள திரையுலகில் நடிகர்கள் 50 சதவீதம் சம்பளம் குறைத்துக் கொள்வதாக தீர்மானத்தில் தெரிவித்திருக்கின்றனர். தெலுங்கு நடிகர்களும் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளச் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.