கந்தசஷ்டி கவசத்தை விமர்சித்தவருக்கு இயக்குனர் பேரரசு கண்டனம்..

by Chandru, Jul 16, 2020, 19:25 PM IST

முருகப்பெருமானின் கந்தசஷ்டி கவசம் பற்றி இணையதளத்தில் அவதூறாக யாரோ விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்கு இந்து அமைப்புகளும், நடிகர்கள் ராஜ்கிரண், சவுந்திரராஜா போன்றவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். தற்போது இயக்குனர் பேரரசு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:கருப்பு கூட்டம் காட்டுமிராண்டி கூட்டம்:ஒரு தாய் தன் குழந்தைக்கு தாய் பாலூட்டுவது கண்ணியம்.

அதைக் காமக் கண்ணோடு கண்டு அத்தாயின் மார்பை வர்ணிப்பது எவ்வளவு வக்ரமோ அவ்வளவு வக்ரம் கந்த சஷ்டியை காமப் பார்வையில் விமர்சனம் செய்தது! நீ ! உன் தாய், தந்தைக்குப் பிறந்தாய் என்பது தான் நற்செய்தி !அவர்கள் எப்படி இணைந்தார்கள், தாய் எப்படி உன்னைப் பெற்றாள் என்பதை விளாவாரியாக விளக்குவது எவ்வளவு கேவலமோ அவ்வளவு கேவலம் கந்த சஷ்டியை நாகரிகம் இல்லாமல் விளக்கியது! கருப்பர் கூட்டம் எனும் காட்டுமிராண்டி கூட்டம் கந்த சஷ்டியை தரக்குறைவாக விமர்சனம் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்! சமீப காலமாக இந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும் இழிவு படுத்தும் விதமாகப் பலர் பேசிவருகின்றனர்! ஒரு மதத்தின் நம்பிக்கையைச் சீர் குழைக்க எவருக்கும் உரிமை இல்லை! கருப்பர் கூட்டத்திற்கு மட்டுமல்ல, சில கள்ளக் கூட்டத்திற்கும் இதே வேலையாப் போச்சு. உண்மையான கடவுள் நம்பிக்கை உள்ளவன் தன் மதத்தைப் போற்றுவான், பிற மதத்தைத் தூற்ற மாட்டான்.

அதே போல் பிற மதத்தின் விஷயங்களில் தலையிடவும் மாட்டான். ஆனால் இன்று
இந்து மத விவகாரங்களில் பிற மதத்தினர் ஆர்வம் காட்டுகின்றனர்! இதுவும் ஒரு ஈனச்செயல்!சாமியே இல்லை என்பவன் தான் இப்போது சாமியை எந்நேரமும் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறான். பொதுக் கழிப்பிடங்களில் சிலர் அசிங்கமான வார்த்தைகளைக் கேவலமான புத்தியோடு எழுதி வைப்பார்கள்.அப்படிப்பட்ட புத்தி உள்ளவன் தான் கந்த சஷ்டி கவசத்தை நாகரிகமில்லாமல் விமர்சனம் செய்திருக்கிறான். இவர்கள் ஊளையிடுவது கொள்கையால் அல்ல பணம் சம்பாதிப்பதற்காக! இவர்களுக்கு கொடுக்கும் தண்டனையில் இனி யாரும் இந்து மதத்தை மட்டுமல்ல, எந்த மதத்தையும் எவரும் கேவலமாக விமர்சனம் செய்யக் கூடாது.

இவ்வாறு பேரரசு கூறி உள்ளார்.


Leave a reply

Speed News

 • பெங்களூரு கலவரத்தில் இது வரை 206 பேர் கைது

   

  பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உறவினர் நவீன் என்பவர் பேஸ்புக்கில் போட்ட பதிவால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலவரம் வெடித்தது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. எம்.எல்.ஏ. வீடு தாக்கப்பட்டது. 

  இந்த கலவரம் தொடர்பாக பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் கலீம் பாஷா உள்பட  இது வரை 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் இணை கமிஷனர் சந்தீப் பாடீல் தெரிவித்துள்ளார். 

  Aug 14, 2020, 10:15 AM IST

 • ஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு.. ஆக.12ம் தேதி விசாரணை

  ஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.

  சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

  இதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது. 

  Aug 10, 2020, 14:48 PM IST

 • பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா..

  முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார். 

  Aug 10, 2020, 14:41 PM IST

 • குஜராத்தி்ல் முகக்கவசம் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம்..

  குஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். 

  Aug 10, 2020, 14:33 PM IST

 • ராஜஸ்தானி்ல் நாளை மாலை பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..

  ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.

  இந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது. 

  Aug 10, 2020, 14:31 PM IST

More Cinema News