காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் கக்கன். நேர்மையானவர் என்று அரசியல்வாதிகளாலும், மக்களாலும் இன்றளவும் புகழப்பட்டு வருகிறார். இவர் அமைச்சர் பதவி முடிந்து வீடு திரும்பிய போது அரசு பஸ்ஸில் தான் சென்றார் என இவரது புகழை உலகம் பேசுகிறது. கக்கன் குடும்பத்திலிருந்து அவரது பேத்தி ராஜேஸ்வரி சமீபத்தில் டிஐஜி ஆகப் பொறுப்பேற்றார். அவருக்கு அவரது சொந்த கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்து வருவதுடன் இளைஞர்களும் தங்களது வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர்.
டிஐஜியாக பொறுப்பேற்றிருக்கும் ராஜேஸ்வரிக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். எனது தந்தை கக்கன் அவர்களின் பெரும் ரசிகர் , அவருடைய பேத்தி டி.ஐ.ஜி ஆகப் பொறுப்பேற்றிருப்பது தங்கள் குடும்பத்திற்கு கிடைத்த பெருமை எனத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் கமல்ஹாசன் கூறும்போது,நேர்மையின் அடையாளமாம் கக்கன் அய்யா அவர்களின் பெரும் ரசிகர் என் தகப்பனார் திரு. D. ஸ்ரீனிவாசன். அவரின் பேத்தி, திருமிகு.ராஜேஸ்வரி அவர்கள் தமிழக டி.ஐ.ஜி ஆகப் பொறுப்பேற்றிருப்பது எங்கள் குடும்பத்திற்குக் கிடைத்த பெருமையும் கூட. நாளை நமதாகட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.