டிவிக்களில் ஒரு விளம்பரம் வரும் மழைக்கும் ஒன்றும் ஆகக்கூடாது வெயிலுக்கும் ஒன்றும் ஆகக்கூடாது , அடிக்கிற பெயின்ட் பத்து வருஷத்துக்கு அப்படியே இருக்கணும் என்பார். அப்படின்னா லேமினேஷன் பண்ணிடுவோமா என பெயிண்ட் கான்ட்ராக்டர் சொல்வார். அப்படியொரு வேலை செய்து டிரெண்டிங் ஆகி வருகிறார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.
மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ஷாருக்கானின் மன்னாத் பங்களா முழுவதையும் பிளாஸ்டிக் ஷீட் கொண்டு மூடியிருக்கிறார். அந்த படம் நெட்டில் வெளியாகி உள்ளது.
கொரோனா தொற்று பரவாமலிருக்க ஷாருக்கான் தனது பங்களாவை பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடியிருக்கிறார் என்று சிலர் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் ஏர் பாம் மூலமாக வீசப்பட்டுப் பரப்பப்படுவதாக புதிய வதந்தி பரவி வருகிறது. அதுபோல் ஏர் பாம் வீசி தொற்றை யாரும் பரப்பக்கூடும் என்பதால் இதுபோல் பங்களாவை அவர் மூடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மும்பையில் தற்போது கடுமையான மழைபொழிந்து வருவதால் அவர் பங்களாவை மூடி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த முறை மட்டுமல்ல வருடா வருடம் மழைக்காலங்களில் அவர் இவ்வாறு செய்வது வழக்கம் என்கிறது ஷாருக் வட்டாரம்.