ஆணாக மாறிய பிரபல நடிகை.. அவரே போட்டோ வெளியிட்டு ரகளை..

by Chandru, Jul 22, 2020, 18:29 PM IST

திரைப்படங்களில் ரஜினி முதல் அனைத்து நடிகர்களும் ஏதாவது காட்சியில் பெண் வேடம் அணிந்து நடித்திருக்கிறார்கள். ஆனால் எல்லா நடிகைகளும் ஆண் வேடம் அணிந்து நடித்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அப்படி நடித்தாலும் நடிக்கா விட்டாலும் தற்போது டிஜிட்டல் தளம் அவர்களுக்கான வாய்ப்பை அளித்திருக்கிறது. திடீரென்று குஷ்புவுக்கு ஆண் ஆகிப்பார்த்தால் என்ன என்று தோன்றவே ஃபேஸ் ஆப் மூலம் தனது முகத் தோற்றத்தை ஆணாக மாற்றி அதை அவரே டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதற்கு அவரே கமெண்ட்டும் பகிர்ந்திருக்கிறார். ஒருவேளை நான் ஆணாக பிறந்திருந்தால் கூட அழகாகத் தான் இருந்திருப்பேன் எனச் சொல்லிச் சிரிப்பு இமோஜிக்களை தெறிக்க விட்டிருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஃபேஸ் ஆப் செயலி அறிமுகமான போது பலரும் அதை வைத்து விளையாடினார்கள். கிரிக்கெட் வீரர்கள் முதல் பல பிரபலங்களை ஆணாகவும் பெண்ணாகவும். இளமையாகவும், முதுமையாகவும் மாற்றி வெளியிட்டு காமெடி நடத்திக் கொண்டிருந்தார்கள் நெட்டிஸன்கள்.நடிகை குஷ்புவைப் பொறுத்தவரை நடித்தோமா வீட்டுக்குப் போனோமா என்றில்லாமல் பொது வாழ்க்கையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அரசியலில் இணைந்து பணியாற்றி வருவதுடன், சினிமா, டிவி சீரியல், கோடீஸ்வரி போன்ற ஷோக்கள் என நடத்தியும் சினிமா தயாரிப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்தி வருகிறார். தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். இப்படத்தைச் சிவா இயக்கி வருகிறார்.


Previous
Next

Leave a reply

Speed News

 • ஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு..

  ஆக.12ம் தேதி விசாரணை

  ஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.

  சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

  இதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது. 
  Aug 10, 2020, 14:48 PM IST
 • பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா..

  முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார். 

  Aug 10, 2020, 14:41 PM IST
 • குஜராத்தி்ல் முகக்கவசம் அணியாவிட்டால்

  ஆயிரம் ரூபாய் அபராதம்..

  குஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். 

  Aug 10, 2020, 14:33 PM IST
 • ராஜஸ்தானி்ல் நாளை மாலை

  பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..

  ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.

  இந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது. 

  Aug 10, 2020, 14:31 PM IST
 • டெல்லி, மும்பை, சென்னையில்

  கட்டுப்படாத கொரோனா பரவல்

  இந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 

  டெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.  மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.  

  Jul 6, 2020, 12:49 PM IST

More Cinema News