ஊரே பத்திகிட்டு எரியுது இங்கு லெக் பீஸ் உடன் பிரியாணி பார்ட்டி.. பிரபல நடிகையின் கார் பிக்னிக்..

by Chandru, Jul 27, 2020, 11:15 AM IST

ஊரே பத்திகிட்டு எரியும் போது நீரோ மன்னன் பிடியில் வாசிச்ச கதையா மாதிரி நடிகை வனிதாவோட மேட்டர்ல லெக் பீஸ் பிரியாணியோட பிக்னிக் போய் ஆட்டம் போட்ட படம் நெட்டில் வைரலாகுது..கொரோனா ஊரடங்கு, சாத்தான்குளம் பிரச்சனை, தியேட்டர் திறப்பாங்களா மாட்டாங்களான்னு தெரியலன்னு ஊர்ல எவ்ளோ பிரச்சனை இருக்கு .. ஆனா யூடியூப் டிரெண்டுங்கள் என்னோட பிரச்சனை தான் நம்பர் டிரெண்டிங்ள இருக்குன்னு கொஞ்சம் முன்னாடி தான் வனிதா சொன்னார். சரியாத்தானே சொல்லியிருக்காருன்னு அதுக்கு லைக்ஸ் கமென்ட்ஸ் வேற.. சரி விஷயத்துக்கு வருவோம்.. பழைய மாவுதான் ஆனா தோசை புதுசு ..

நடிகை வனிதா டிவி டெக்னீஷியன பீட்டர் பாலை கடந்த 2 வாரத்துக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். அது சர்ச்சையானது. கல்யாணம் தானே பண்ணிக்கிட்டாங்க அதுல என்ன சர்ச்சைன்னு கேக்கறவங்க கொஞ்சம் பேர் இருக்காங்க.. இது முதல் கல்யாணமில்ல.. வனிதாவுக்கு 3வது கல்யாணம், பீட்டருக்கு ரெண்டாவது கல்யாணம். வனிதா ஏற்கனவே ரெண்டு கல்யாணம் பண்ணி டைவர்ஸ் வாங்கிட்டாரு.. ஆனா பீட்டர் பால் முதல் கல்யாணம் பண்ண மனைவிகிட்ட டைவரஸ் வாங்காம வனிதாவை கல்யாணம் பண்ணிகிட்டாங்க.. உடனே பீட்டர் மனைவி எலிசெபத் ஹெலன் வடபழனி போலீஸ்ல கம்லைன்ட் கொடுத்துட்டு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்கிட்ட போய், இதையெல்லாம் தட்டிக்கேக்க மாட்டிங்களான்னு உசுப்பிவிட.. அவர் சேலை இழுத்து முடிஞ்சிகிட்டு வனிதாவை தட்டிக்கேட்டார். அங்க தான் வனிதாவுக்கும், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் பத்திக்கிக்சி..

இரண்டு பேரும் வீடியோ லைவ்ல வந்து. உன்னைபத்தி எனக்குத் தெரியாதா? நீ புருஷன்னு ஒருத்தன வச்சி கிட்டு ஊர்ல நூறு பேர வச்சிருக்கன்னு வனிதா கேட்க, சரிதான் வாயை மூடு. குழாயடி சண்டையா போட்ற எனக்கும் பேசத் தெரியும். பேசனா நீ தாங்கமாட்டேனு சொல்ல.. ஒரே கலவரம் ஆயிடுச்சி.. இதுக்கிடையில நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வக்காளத்து வாங்க அவரையும் வனிதா, காமெடி பீஸ்ன்னு கலாய்ச்சார். இது போதாதுன்னு சூர்யா தேவின்னு ஒரு லேடி. தயாரிப்பாளர் ரவீந்திரன். இயக்குனர் நாஞ்சில் விஜயன்னு எல்லாம் சேர்ந்துகிட்டு வனிதாவையும் பீட்டரையும் வெச்சி செஞ்சாங்க. அவர்களுக்குப் பதில் சொன்ன வனிதா அப்படியே கார்ல போயி போலீஸ்ல எல்லார் மேலையும் கம்லைன்ட் கொடுத்தார்.

வனிதா மற்றும் நடிகைகளுக்கு இடையேயான மோதல்ல போலீஸ் தலையிட்டது. முதல்ல சமாதான பேச்சு நடந்துச்சு. சூர்யா தேவி சமாதானம் ஆகல. வனிதா மேல் நான் கொடுத்த புகார விசாரிக்கணும்னு ஒத்தக்கால நின்னாங்க. ரெண்டுநாள் கேப்ல சூர்யா தேவிய போலீஸ் கைது பண்ணி கோர்ட்ல ஆஜர் படுத்தி பிறகு ஜாமின்ல விட்டாங்க..
இப்ப சூர்யா தேவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கு அவர தேடினா அவர் தலைமறைவாயிட்டருன்னு சொல்றாங்க. இதுக்கிடையில் லட்சுமி ராமகிருஷ்ணனையும், கஸ்தூரி, நாஞ்சில் விஜயனையும் போலீஸ் விசாரிக்கணும்னு வனிதா பிரஷர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். வனிதா சந்திராஷ்டம்ல வாய விட்டுட்டார்போலிருக்கு, தஞ்சாவூர் காரங்க அவருக்கு எதிரா குரல் கொடுக்க ஆரம்பிச்சாங்க.தஞ்சாவூர் காரங்க ரெண்டு பெண்டாடி காரங்கன்னு வனிதா எப்படிச் சொல்லலாம். ஜனங்களப்பத்தி தப்பா பேசறதுக்கு அவருக்கு என்ன உரிமை இருக்குன்னு கொடி பிடிச்சாங்க.

நயன்தாராவைப் பத்தியும் வனிதா பங்கமா சொன்னதால நயன் ரசிகர்கள் ஒருபக்கம் ஹேஷ் டேக் உருவாக்கி, நயன்தாராகிட்ட வனிதாவே மன்னிப்பு கேள் என்று டிரெண்டிங் செய்ய ஆரம்பித்தார்கள். போதும்டா சாமின்னு டிவிட்டரை தற்காலிகமா குளோஸ் பண்ணிட்டு எஸ்ஸானார் வனிதா. கொதிப்பு கொஞ்சம் அடங்கிய பிறகு மெல்ல டிவிட்டருக்குள் ரீஎன்ட்ரி கொடுத்த வனிதா தஞ்சாவூர்காரங்ககிட்ட பகிரங்க மன்னிப்பு கேட்டு தப்பிச்சண்டா சாமின்னு கப்சிப் ஆனார். அதேபோல நயன்தாராவை நான் தப்பா சொல்லல, அவர் தன்மேல எவ்ளோ கலங்கம் சுமத்தினாலும் அதையெல்லாம் ஏறி மிதிச்சி நம்பர் ஒன் நடிகையா இருக்காங்க நானும் அதே போல் ஏறி மிதிச்சிட்டு வருவேன்னு பெருமையாதா சொன்னேன் அந்த விஷயத்துலயிருந்தும் லாவகமா வெளியில் வந்தார்.
லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, நாஞ்சில் விஜயன், சூர்யாதேவி சர்ச்சை மட்டும் இன்னும் ஓயவில்லை.

ஆனால் வனிதா டென்ஷன் எதுவும் இல்லாம குடும்பத்தோடு காரில் பிக்னிக் கிளம்பிட்டார்.பீட்டர், வனிதா, வனிதா மகள்கள் என்று குடும்பமே காரில் சென்னைக்கு அருகே அமைதி இருக்கிற இடத்துக்குப் போய் ஜாலியா என்ஜாய் பண்ணாங்களாம். தட்டு நிறைய லெக் பீஸ் வெச்சி வெளுத்துக் கட்டும் படத்தைப் பதிவிட்டிருக்கிறார் வனிதா. எல்லாரையும் வரிசையா நிக்கவச்சு செல்ஃபி போட்டோ எடுத்தார் பீட்டர் பால். இந்த படங்கள் நெட்டில் வைரலாயிட்டிருக்கு.


Leave a reply

Speed News

 • ஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு..

  ஆக.12ம் தேதி விசாரணை

  ஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.

  சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

  இதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது. 
  Aug 10, 2020, 14:48 PM IST
 • பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா..

  முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார். 

  Aug 10, 2020, 14:41 PM IST
 • குஜராத்தி்ல் முகக்கவசம் அணியாவிட்டால்

  ஆயிரம் ரூபாய் அபராதம்..

  குஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். 

  Aug 10, 2020, 14:33 PM IST
 • ராஜஸ்தானி்ல் நாளை மாலை

  பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..

  ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.

  இந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது. 

  Aug 10, 2020, 14:31 PM IST
 • டெல்லி, மும்பை, சென்னையில்

  கட்டுப்படாத கொரோனா பரவல்

  இந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 

  டெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.  மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.  

  Jul 6, 2020, 12:49 PM IST

More Cinema News