கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி பல்வேறு ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறது. ரோஜா படத்தில் இணைந்த முதல் கூட்டணியே தேசிய விருது வென்ற வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. அந்த வெற்றி பல படங்களில் தொடர்ந்தது இடையில் இருவருக்கும் சிறு பிணக்கு ஏற்பட்டது. அதன் பிறகு இருவருக்குமான பேச்சுவார்த்தைகள் குறைந்தன.இன்றைக்கு ரஹ்மானுக்கு ஒரு சோதனை. பாலிவுட்டில் அவரை புறக்கணிக்கிறார்கள் என்ற வேதனை. ஒரு கூட்டம் எனக்கெதிராக பாலிவுட்டில் செயல்படுகிறது என்று அவர் கூறியதும் பதறாத மனங்களும் பதறின. அந்த பதற்றம் கவிப்பேரரசுக்குப் பன்மடங்கு அதிகம் ஆனது. துடித்த மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு ரஹ்மானுக்காக ஒரு மான் கவிதை எழுத்து தைரியம் சொன்னார்.
அந்த கவிதை இதுதான்:
அன்பு ரகுமான்!
அஞ்சற்க.
வட இந்தியக் கலையுலகம்
தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு
ஆண்மான்களை ஆதரிப்பதில்லை.
இரண்டுக்கும் உயிர்வாழும்
எடுத்துக்காட்டுகள் உண்டு.
ரகுமான்! நீங்கள் ஆண்மான்;
அரிய வகை மான்.
உங்கள் எல்லை
வடக்கில் மட்டும் இல்லை.
இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.
சொன்னதென்னவோ மான் பற்றி. ஆனால் அதில் பெண்மான், ரஹ்மான். சல்மான், ஆண்மான் என எத்தனை அர்த்தங்கள் என்று ஆழ்ந்து படித்தால் புரியும். ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியபோது மும்பையில் நடந்த விழாவில் பங்கேற்ற சல்மான், ரஹ்மானைக் குறைத்து மதிப்பிடும் வகையில், ரஹ்மான் அவ்வளவு திறமையானவரில்லை என்றாலும்.. தனது பாலிவுட் பெரியண்ணா தனத்தைக் காட்டினார் சல்மான்கான். ஆனால் அதே மேடையில் சல்மான் கைகுலுக்க முயன்ற போது கைகொடுக்காமல் புறக்கணித்தார் ரஹ்மான். இந்த மான் கூட்டங்கள் ரஹ்மானுக்கு எதிராக பணியாற்றுகிறதோ என்ற சந்தேகம் இப்போது எழுகிறது. சில வருடங்களுக்கு முன் ரஹ்மானுக்குக் குவிந்த இந்தி பட வாய்ப்புகள் இந்த ஆண்டு (2020) ஒரேயொரு படமாகக் குறைந்துவிட்டது எனலாம். மற்றொரு படம் அவர் தயாரிக்கும் சொந்தப்படம்.