பிரபாஸ், அனுஷ்கா பட இயக்குனருக்கு கொரோனா தொற்று .. குடும்பமே தனிமைப்படுத்தலில் உள்ளனர்..

Advertisement

நடிகர் விஷால், நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் ஆகியோர் சமீபத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள். இருவரும் சிகிச்சைக்கு பிறகு கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டனர். இந்நிலையில் பிரபல இயக்குனர் அவரது குடும்பத்தினர் கொரோனா வைரஸுக்குள்ளாகி இருக்கின்றனர். பிரபாஸ், அனுஷ்கா நடித்த படம் பாகுபலி. இப்படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜமவுலி . இவரும் மற்றும் அவரது குடும்பத்தினரும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தெரிந்தன.

ராஜமவுலி, அவரது குடும்ப உறுப்பினர்களும் சில நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் அது தானாகவே குணம் அடைந்தது. முன்னெச்சரிக்கையின் ஒரு நடவடிக்கையாக, ராஜமவுலியும் அவரது குடும்பத்தினரும் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், அதன் முடிவில் வைரஸ் தொற்று பாசிடிவாக இருந்தது. தற்போது ராஜமவுலியும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ளனர்,இந்த தகவலைத் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட ராஜமவுலி, "எனது குடும்ப உறுப்பினர்களும் எனக்கும் சில நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் இருந்தது. அது தானாகவே தணிந்தது, ஆனாலும் நாங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டோம். இதன் விளைவாக லேசான கோவிட் பாசிட்டிவ் இருப்பது தெரிய வந்துள்ளது. நாம் அனைவரும் எந்த அறிகுறிகளும் இல்லாமல் நன்றாக உணர்கிறோம், அனைத்து முன்னெச்சரிக்கை வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம். எதிர்ப்புச் சக்தியை உருவாக்கக் காத்திருக்கிறோம், இதனால் பிளாஸ்மாவை சிகிச்சைக்கு கொரோனாவிலிருந்து குணம் அடைந்தவர்கள் தானம் செய்யலாம்" என்று கூறியுள்ளார்.

நடிகைகள் வேதிகா மற்றும் ராஷி கண்ணா, இசை அமைப்பாளர் எஸ். தமன், ஆகியோர் "சீக்கிரம் நலம் பெறுங்கள். விரைவில் கொரோனாவிலிருந்து மீண்டு வாருங்கள்" என இயக்குனருக்கு மெசேஜ் பதிவிட்டுள்ளனர்.இதற்கிடையில், எஸ்.எஸ்.ராஜமவுலி ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க தயாராகக் காத்திருக்கிறார்கள். இயக்குனர் ராஜமவுலி பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகியவற்றால் இந்தியா முழுவதும் பிரபலமாகி இருந்தாலும் அதற்கு முன்பே, அவர் 'மகதீரா' மற்றும் 'நான் ஈ' போன்ற சூப்பர் ஹிட் படங்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>