கொரோனா ஊரடங்கில் வீட்டுக்குள்ளே முடங்கி உடற்பயிற்சி , யோகா, சமையல் திறமைகளை வெளிப்படுத்தி வந்த நடிகைகளுக்கு வீட்டுக்குள் இருப்புக் கொள்ளவில்லை. வெளியில் சென்றால் தான் கொஞ்சமாவது ரிலாக்ஸ் ஆக முடியும் என்று தமன்னா, மனீஷா கொய்ராலா போன்றவர்கள் காட்டுப் பகுதிக்குள் டிரெக்கிங் கிளப்பி விட்டார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியே சீட் பெல்ட் மாட்டாமல் கார் ஒட்டிக் கொண்டு பண்ணை வீட்டுக்குச் சென்று நடைப்பயிற்சி மேற்கொண்டார். சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதற்காக நூறு ரூபாய் அபராதமும் கட்டினார். நடிகை ரகுல் ப்ரீத் சிங் கையில் கோல்ஃப் பந்தையும் மட்டையையும் எடுத்துக்கொண்டு கிரவுண்டுக்கு சென்று விட்டார்.
ரகுல் ப்ரீத் சிங் தீவிர கோல்ஃப் வீரர். அவர் தேசிய அளவில் கூட இப்போட்டியில் விளையாடியுள்ளார். வீட்டுக்குள் முடங்கி இருந்த ரகுல் பல மாதங்களுக்கு பிறகு கோல்ஃப் விளையாடுவதற்காக வெளியேறினார். உடற்தகுதியைக் கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்றால் அதற்காகக் காலநேரம் பார்க்காமல் அர்ப்பணிப்புடன் ஒர்க் அவுட் செய்வார். ஊட்டிக்குச் சென்று 5 மணி நேரம் அவர் மொட்டை வெயிலில் கோல்ஃப் விளையாடி உடலை வியர்வையால் நனைத்தார். இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் “ஒரு நாள் ஊட்டியில் நன்றாகக் கழித்தது. பரந்து விரிந்த மைதானத்தில் 18 துளைகளில் மரண விளையாட்டு விளையாடினேன். அதுவும் கடும் வெயிலில். இப்போது தான் பல மாதங்கள் வீட்டுக்குள் தங்கியிருப்பது எனக்குத் தெரிகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
கோல்ஃப் மைதானம் பசுமையான நிலத்துடன் அழகாக இருந்தது மற்றும் நடிகை அனைவருமே சரியான கோல்ஃப் அமர்வுக்குத் தயாராக இருந்தனர், போலோ டிஷர்ட்டுடன் ஜிம் உடைகள் அணிந்திருந்தனர். ரகுல் இளஞ்சிவப்பு நிற ஸ்கர்ட், ஒரு ஜோடி விளையாட்டு காலணிகள் மற்றும் வெள்ளை தொப்பியுடன் காணப்பட்டார். ரகுல் பிரீத் கடைசியாக சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்திருந்தார். அடுத்து, சிவகார்த்திகேயனுடன்அயலான் படத்தில் நடிக்கிறார். சைன்ஸ் பிக்ஸன் கதையான இதில் அவந்திகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் நடிக்கிறார்.