நடிகர் நகுல்- ஸ்ருதி தம்பதிக்கு குழந்தை பிறந்தது..

by Chandru, Aug 3, 2020, 19:04 PM IST

நடிகர் நகுல் கடந்த 2003ம் ஆண்டு பாய்ஸ் படம் மூலம் நடிக்க வந்தார். அமுல் பேபி போல் குண்டு குண்டு என்றிருந்தார். அதன்பிறகு உடல் எடையை கச்சிதமாக குறைத்துக்கொண்டு ஆச்சரியப் படத்தக்க வகையில் ஹீரோவுக்கு ஏற்ற உடற்கட்டுடன் 5 வருடம் கழித்து காதலில் விழுந்தேன் படத்தில் ஹீரோவாக நடித்தார். பின்னர் கந்த கோட்டை, நான் ராஜாவாகப் போகிறேன் படங்களில் நடித்தார். தற்போது எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிகை தேவயாணியின் தம்பி ஆவார்.

நகிலுக்கும் அவரது கேர்ள் ஃபிரண்ட் ஸ்ருதி பாஸ்கருக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. சமீபத்தில் தன் மனைவி கர்ப்பமாக இருப்பதை இணைய தளத்தில் தெரிவித்திருந்தார் நகுல். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. மனைவி மற்றும் குழந்தையின் விரல்களைப் பிடித்தபடி இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் நகுல்,எங்கள் வாழ்க்கை இன்னும் மேஜிக் ஆகியிருக்கிறது. தந்தையின் மகள், தாயின் உலகம் பேபி குல்பி பிறந்திருக்கிறார் எனத் தெரிவித்திருக்கிறார்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை