ஷகீலா பட பாணியில் வெப் சீரியல்கள்.. படுக்கை அறை காட்சியில் நடித்த அஜீத் நடிகை...

by Chandru, Aug 5, 2020, 11:41 AM IST

கவர்ச்சி பாம் ஷகீலா நடித்த மலையாள படங்கள் ஒரு காலத்தில் மம்மூட்டி, மோகன்லால் படங்களுக்கு தண்ணிகாட்டியது. ஷகீலா பட ரிலீஸ் என்றால் பிரபல நடிகர்கள் தங்கள் பட ரிலீஸை தள்ளிவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் வீட்டில் இருக்கும் இளவடங்கள் ஒடிடி தளங்களில் படம் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகி இருக்கின்றனர். படம் மட்டுமல்லாமல் பிரபல நடிகைகள் நடிக்கும் வெப் சீரிஸ்களும் வெளிவரத் தொடங்கி உள்ளன.நடிகைகள் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் என இரண்டு படங்கள் ஒரு திகில் படமாகவும் பெண்ணுக்கு நடக்கும் அநியாயத்தைத் தட்டிக்கேட்டும் கதைகளாகவும் வெளியானது. வழக்கம்போல் கருத்துள்ள படங்களை யாரும் பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை.

இந்த நேரத்தில் அதிரடியாக ஆபாச காட்சிகளுடன் கூடிய படங்களுடன் ராம் கோபால் வர்மா வெப் தளத்துக்குள் புகுந்தார். இதற்காகவே ஆடையில்லாமல் துணிச்சலாக நடிக்கும் நடிகைகளைத் தேர்வு செய்து ஆபாச கோணங்களில் காட்சியை வைத்து பகிரங்கமாகப் படுக்கை அறை காட்சிகள் கொண்ட படங்களை வெளியிட்டார். அதற்கு இளவட்டங்களிடம் வரவேற்பு அமோகமாக இருந்தது. வர்மா கல்லாப்பெட்டியும் நிரம்பிக்கொண்டிருக்கிறது. கிளைமாக்ஸ், நேக்கட் போன்ற படங்கள் படு ஆபாசமாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்த டேஸ்ட் தான் இப்போது ஒடிடி மற்றும் வெப் தளங்களில் பிய்த்துக்கொண்டு டிரெண்டிங்கில் இருக்கிறது.கவர்ச்சி காட்டமாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருந்த நடிகை நித்யா மேனன் நடித்த பிரீத் என்ற வெப் தொடரில் இன்னொரு நடிகைக்கு லிப் டு லிப் முத்தம் தரும் காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

அந்த படங்கள் நெட்டில் வெளியாகி வைரலானது. தற்போது 48 வயதான அஜீத் பட நடிகை 24 வயது நடிகருடன் லிப் டு லிப் காட்சியில் நடித்துத் தெறிக்கவிட்டிருக்கிறார். கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் அஜீத்குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார் தபு. மேலும் சிறைச்சாலை, சிநேகிதியே உள்ளிட்ட பல்வேறு தமிழ், தெலுங்கு இந்தி படங்களில் நடித்திருக்கிறார். எ சூட்டபிள் பாய் என்ற வெப் தொடரில் தற்போது நடித்திருக்கிறார். இத்தொடரை மீரா நாயர் இயக்கி உள்ளார்.விக்ரம் சேத் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இது உருவாகி இருக்கிறது . 48 வயதான தபு , 24 வயதான இஷான் கட்டர் நடிகருடன் சூடான லிப் டு லிப் காட்சிகளிலும், படுக்கை அறை காட்சியிலும் நடித்து வெளுத்து வாங்கி இருக்கிறார். சினிமாவில் இதுபோன்ற காட்சிகள் வந்தால் உடனே சென்சாரின் கத்தரிக்கோல் வந்து நிற்கும் வெப் மற்றும் ஒடிடி தளங்களுக்கு எந்த சென்சாரும் கிடையாது என்பதால் கத்தரிக்கு வேலை இல்லை.தற்போது ஒடிடி தளங்களுக்கும் சென்சார் தேவை என்ற குரல் ஒலிக்கத்தொடங்கி இருக்கிறது.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை