மெகா ஸ்டார் முன்னிலையில் தமிழ் நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம்..

Actress Niharika gets engaged to beau Chaitanya in front of Chiranjeevi,

by Chandru, Aug 14, 2020, 10:28 AM IST

மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் மற்றும் நடிகர் நாகபாபுவின் மகள் நிஹாரிகா கொனிடெலா. தெலுங்கில் ஒக மனசு படம் மூலம் அறிமுகமானவர். அடுத்து விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லேன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். மீண்டும் தெலுங்கில் ஹாப்பி வெட்டிங் உள்ளிட்ட சில படங்களில் நடித்ததுடன் வெப் தொடர்களிலும் நடித்திருக்கிறார். நிஹாரிகாவுக்கும், சைதன்யா ஜொனல கெட்டாவுக்கும் நேற்று ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் கடைபிடிக்கப்பட்டது, நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். நடிகர்கள் சிரஞ்சீவி, ராம் சரண் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

நிஹாரிகா மணக்க உள்ள சைதன்யா இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ் முன்னாள் மாணவர் அத்துடன் ஐதாராபாத் தொழில் நிறுவனம் ஒன்றில் உயர் பதவி வகிக்கிறார். நிஹாரிகா, சைதன்யா திருமணத்தை வரும் டிசம்பர் மாதம் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.
கொரோனா காலம் முடிந்த பிறகு தடபுடலாக திருமணம் நடத்தலாம் என்று ஏற்கனவே காத்திருந்த நடிகர் ராணா, மிஹீகா, நடிகர் நிதின் ஷாலினி ஜோடிகள் கொரோனா காலம் இப்போதைக்கு முடியாது என்று முடிவு செய்து தங்களது திருமணத்தை சமீபத்தில் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை