மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார் கங்கனா ரனாவத். இவர் ஏற்கனவே தாம் தூம் படத்தில் நடித்துள்ளார். இந்தியில் மணிகர்னிகா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
கங்கனா அடிக்கடி அரசியல் கருத்துக்கள் கூறி சர்ச்சையில் சிக்குகிறார். குறிப்பாக அவர் பாஜ ஆதரவாளர்போல் பேசி வருகிறார். மேலும் இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை பற்றி கருத்து தெரிவித்தார்.
அதில் அரசியல்வாதி ஒருவரை அழைத்து விசாரிக்க வேண்டும். தயாரிப்பாளர் கரண் ஜோகரை விசாரிக்க வேண்டு எனத் தெரிவித்தார். இது தொடர்பாக புகார் பெற அவரை போலீஸார் அழைத்த போது மனாலிக்கு சென்று அங்குள்ள வீட்டில் தங்கினார். பின்னர் ஒருநாள் தனது வீட்டு அருகே 2 முறை துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாகப் போலீசில் புகார் அளித்ததுடன் என்றாவது ஒருநாள் நான் வீட்டில் தூக்கில் இருந்தால் அது நான் செய்து கொண்டது கிடையாது.
என்னைச் சிலர் கொல்லப்பார்க்கிறார்கள். அவர்கள் தான் கூலிப்படையை ஏவி என்னை மிரட்டுவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர் என்றார்.கங்கனாவிற்கு எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாது என்று அவரது தாயார் புரோகிதர்களை வீட்டிற்கு அழைத்து சிறப்பு பூஜை நடத்தினார். மேலும் கங்கனாவை வீட்டில் அமர வைத்து பதினைந்தாயிரம் மகாமிருந்துந்திய மந்திரங்களைச் சொல்ல வைத்துள்ளார்.