விஜய் தேவரகொண்டா தெலுங்கில் நடித்த அர்ஜூன் ரெட்டி படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்படம் தமிழில் துருவ் விக்ரம் ஹூரோ அறிமுகப்படமாக அமைந்தது. அதில் அவரது நடிப்பு வரவேற்பைப் பெற்றது. பனிதா சந்து ஹீரோயினாக நடித்தார். இளமை துள்ளலாகவும் மறுபுறம் கனமாகவும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வரவேற்பு பெற்றார். ஆனால் அடுத்தடுத்த படங்கள் எதுவும் தேடி வரவில்லை.
இதையடுத்து சக நடிகைகள் பாணியில் கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுத்திருக்கிறார்.
தனது இணைய தள பக்கத்தில் கவர்ச்சி படம் ஒன்றை வெளியிட்டு, எனது மேலாடை தொலைந்துவிட்டது எனத் தெரிவித்திருக்கிறார் பனிதா. அவரது கவர்ச்சி படத்துக்கு லைக்குகள் குவிந்து வந்தாலும் ஒரு சிலர் குறும்புத்தனமாக மெசேஜ் பகிர்ந்திருக்கின்றனர். அதில் ஒருவர், இப்படிகூடவா அஜாக்கிரதையா இருக்கிறது என்று அட்வைஸ் செய்து கமெண்ட் பகிர்ந்திருக்கிறார்.