பாதியான அஞ்சலி.. கலக்கத்தில் நடிகைகள்..

Mar 13, 2018, 08:34 AM IST
கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், உள்ளிட்ட பிரபல திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு பரிட்சயமான நடிகையாக வளம் வந்தவர் நடிகை அஞ்சலி. 
பிலிம் பேர் விருது (2008,2011) விஜய் விருதுகள் (2008,2011) விகடன் விருது போன்ற பல விருதுகளை அறிமுகமான சில நாட்களிலே பெற்று பல நடிகைகளின் வயிற்றை கலங்கடித்தார்.
பின்னர் பல வெற்றி படங்களை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருந்த வேளையில் திடீர் என்று குடும்ப பிரச்சனைகள் காரணமாக காணாமல் போனார். சில நாட்கள் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்தார்.
எடை கூடியது சினிமா வாய்ப்புகள் குறைந்தன. ஒரு பாடலுக்கு ஆட்டம் போட மட்டுமே அழைப்பு வந்து கொண்டு இருந்தது. தயங்காமல் அதை செய்தார். சில திரைப்படங்களில் கவர்ச்சியாக ஆட்டம் போட தயாரானார். எடை அதிகரித்த காரணத்தால் பல திரைப்படங்களின் வாய்ப்பை இழந்தார்.
மீண்டும் தவற விட்ட தனது இடத்தை பிடிக்க அஞ்சலி அதிரடியாக தனது உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார். தனது செல்பி புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தனது ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் 
அஞ்சலியின் ஸ்லிம் -ஆன புகைப்படத்தை பார்த்து போட்டியான நடிகைகள் கடுப்பில் உள்ளனர் .
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பாதியான அஞ்சலி.. கலக்கத்தில் நடிகைகள்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை