நடிகை கெளதமியின் மகள் தமிழில் ரீ-மேக் ஆகும் 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
தெலுங்குவின் விஜய் தேவாரகொண்டா நடிப்பில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் தெலுங்கு பட உலகில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து இப்படம் தமிழில் ரீ-மேக் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இயக்குநர் பாலாவின் இயக்கத்திலும், தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜுமுருகனின் வசனத்திலும் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுக நாயகனாகக் களமிறங்குகிறார்.
இந்தத் திரைப்படத்துக்கான கதாநாயகி இதுவரையில் தேர்வு செய்யப்படாத நிலையில், அந்த வேடத்தில் நடிகை கவுதமியின் மகள் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளிவராத நிலையில், துருவ் இந்த ரீ-மேக படமான 'வர்மா'வில் நேபாளத்தில் படப்பிடிப்பில் உள்ளார்.