கொரோனா தொற்று பல லட்சம் பேர்களை இந்தியா முழுவதும் பாதித்திருக்கிறது. பாகுபலி இயக்குனர்கள் எஸ் எஸ்.ராஜமவுலி, தேஜா, நடிகர் விஷால், கருணாஸ், நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் போன்றவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் தேஜா தவிர மற்றவர்கள் கொரோனா தொற்றிலிருந்து மீண்டார்கள். முன்னதாக பாலிவுட்டில் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு மீண்டனர்.
இந்நிலையில் பிரபல பெங்காலி இயக்குனர் ராஜ் சக்கரபோர்த்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். , 7ஜி ரெயின் போ காலணி படத்தை பிரேம் அமர் என்றும், காதல் படத்தை சிரோதினி ட்மி ஜே அமர் என்றும் மற்றும் சென்னை 28 படத்தை லே சக்கா என்ற பெயரிலும் மேலும் கோ, பொல்லாதவன் சிங்கம், எங்கேயும் எப்போதும் உள்படப் பல படங்களையும் வங்காள மொழியில் ரீமேக் செய்துள்ளார். ஒரு சில படங்களில் நடித்தும், தயாரித்தும் இருக்கிறார்.
கொரோனா பாதிப்பு பற்றி டிவிட்டரில் பகிர்ந்துள்ள இயக்குனர் ராஜ் சக்கரவர்த்தி 'கொரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். என் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அவருக்குச் சோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். குடும்பத்தினர் அனைவரும் சோதனை செய்ய இருக்கிறோம்' எனத் தெரிவித்திருக்கிறார்.