விஜய், சூர்யாவை வம்பிழுக்கும் நடிகைக்கு ஹீரோயின் அட்வைஸ்.. அடங்க மறுக்கும் பிரபலம் மீண்டும் லக லக..

Advertisement

நடிகை வனிதா, பீட்டர் பால் 3வது திருமண விவகாரத்தில் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, டைரக்டர் நாஞ்சில் விஜயன், தயாரிப்பாளர் ரவீந்திரன், மற்றும் சூரியதேவியுடன் மோதியவர் நடிகை வனிதா. போலீஸ் வரை மட்டுமல்ல கோர்ட் வரை இந்த விவகாரம் சென்றதுடன் அவர்களைத் தெறிக்கவிட்டார். இந்த விவகாரம் தற்போது ஓய்ந்திருந்தாலும் மீண்டும் எந்த நேரத்திலும் சர்ச்சையாகும் என்ற நிலையில் உள்ளது.
தற்போது வனிதாவிடம் மீரா மிதுன் மோதி இருக்கிறார். இருவருமே கமலின் பிக்பாஸில் பங்கேற்றவர்கள். மாணிக்கம் உள்ளிட்ட பல படங்களில் வனிதா நடித்திருக்கிறார். அதுபோல் 8 தோட்டாக்கள் உள்ளிட்ட சில படங்களில் மீரா மிதுன் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் மீரா மிதுன் நடிகர் விஜய், சூர்யா பற்றி அவதூறாக இணைய தள பக்கத்தில் கருத்து தெரிவித்ததுடன் அவர்களின் குடும்பம் பற்றியும் தவறாகப் பேசினர். இது கடும் சர்ச்சையானது விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை தாறுமாறாகத் திட்டி தீர்த்தனர். மீராவின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. போலிசில் புகார் தரப்பட்டது. மீராமிதுனுக்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் நடிகை வனிதாவுடன் மோதலை தொடங்கிருக்கிறார் மீரா மிதுன். இவர்களுக்குள் என்ன மோதல் என்று பார்த்தால் அது விஜய், சூர்யாவுடனான மோதல் தொடர்ச்சியாக இருக்கிறது. பாலிவுட்டில் மட்டுமல்ல கோலிவுட்டிலும் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் இருக்கிறது என்று மீரா குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு வனிதா, தமிழ் சினிமாவில் வாரிசு ஆதிக்கம் இருக்கிறது என்பதை ஏற்க முடியாது மீரா மிதுன் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள இப்படிப் பேசுகிறார் என்றார். அதைக் கண்ட மீரா நீங்களே ஒரு வாரிசு நடிகை தான் (நெபோட்டிசம் புராடெக்ட்தான்) அதனால் தான். நான் சொல்வதை நீங்கள் ஏற்கவில்லை முடியாது என்று கூறி விளாசினார்.
இருவரின் இந்த சண்டை ரசிகர்களுக்கு மற்றொரு குழாயடி சண்டையாக மாறுமோ என்ற சந்தேகம் எழுந்தது. அப்படி ஆக்கும் முயற்சியில் இருவரின் டிவிட்டர் ஃபாலோயர்கள் விடாதே பிடிங்க அக்கா என்றளவுக்கு உசுப்பி விட்டனர். மீராவுக்குப் பதில் அளித்த வனிதா, ஹாய் குழந்தை, உன்னுடைய நம்பிக்கையையும் அணுகுமுறையையும் நேசிக்கிறேன்.. தொடர்ந்து செல்லுங்கள். நீங்கள் வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களே அப்படி இருங்கள். உங்கள் சாதனைகளை நான் மதிக்கிறேன். ஆனால் யாரையும் குறை சொல்லாமல் நம் வாழ்க்கையை வாழ்வோம். தொழில் ரீதியாக யாரையும் பற்றிப் பேச உங்களுக்கு உரிமை உண்டு, ஆனால் தனிப்பட்ட முறையில் அல்ல. ஒரு நபரின் குடும்பத்தை இணைத்துப் பேசுவது துணிச்சலானது அல்ல.

நீங்கள் உங்கள் அப்பாவைப் பற்றி உயர்வாக பேசியுள்ளீர்கள். அவர் உன்னை நன்றாக வளர்த்தார் என்பது எனக்குத் தெரியும். நெப்போட்டிசம் மற்றும் காஸ்டிங் கோச் என்பது தனிப்பட்ட அனுபவம், அனைவருக்கும் அவர்களின் அனுபவத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு. என்னுடைய அனுபவத்தை வைத்து இந்த கருத்தை வைத்துச் சொல்கிறேன்.
மேலும் எதிர்மறையாகப் பேசுவதை நிறுத்துங்கள். அன்பைப் பரப்புவோம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். அது கொஞ்சமும் சரியில்லை. ஆனால் ஒரு அட்வைஸ் கூலாக இருங்கள். மேலும் உங்கள் போராட்டத்தில் யாரையும் தேவையில்லாமல் இழுக்காதீர்கள். உங்கள் வலியை நீங்கள் தான் அனுபவிக்க வேண்டும். தொடர்ந்து சாதியுங்கள். தொடர்ந்து செல்லுங்கள். உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். எல்லா வற்றுக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வாறு நடிகை வனிதா கூறினார்.

பாரதிராஜா முதல் வனிதா வரை அட்வைஸ் செய்தும் மீரா மிதுன் அடங்குவதுபோல் தெரியவில்லை. இன்னமும் விஜய், சூர்யாவை பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் வம்பிழுத்து வருகிறார். அத்துடன் தற்போது கூடுதலாக பேஷன் உலகிலுள்ள அவலங்களை பேச தொடங்கி இருக்கிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>