இந்திய அரசின். தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் நல அமைப்பின், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் நல ஆணையர் பழ.இராஜேந்திரனால் முற்றிலும் திரைப்படத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் மட்டும் பயன்பெறும் வகையில் தனிப்பட்ட மருந்தகம் இன்று தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் வளாகத்தில் துவக்கி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில், மத்திய நல ஆணையர் , பழ.இராஜேந்திரன் கலந்து கொண்டு திரைப்பட தொழிலாளர்கள் மருந்தகத்தைத் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த மருந்தகத்தின் மூலம்
சுமார் 25ஆயிரம் திரைப்படத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் பயன்பெறுவார்கள் என்று ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
மேலும், இந்த மருந்தகம் அமைவதற்கு ஒப்புதல் வழங்கிய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் மத்திய மந்திரி சந்தோஷ் குமார் கங்குவார்க்கும், செயலாளர் ஹிராலால் சன்வாரியாவுக்கும் மற்றும் இணை செயலாளர் அஜய் திவாரிக்கும், மத்திய நல ஆணையர் பழ.இராஜேந்திரனுக்கும் சம்மேளனத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும் இந்த நிகழ்ச்சியில் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் சுவாமிநாதன், துணைத்தலைவர்கள் தினா, திருஜே ஸ்ரீதர்.
ஷோபி பவுல்ராஜ், செந்தில்குமார், ராதாகிருஷ்ணன், மனோஜ் குமார், பரமலிங்கம் மற்றும் இணைச்செயலாளர்கள் சபரிகிரிசன் .ராஜா, ரமணபாபு, சம்பத்குமார், ஸ்ரீபிரியா, அசோக் மேத்தா, சிக்கந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். திரைப்படத் தொழிலாளர் நலநிதி மருந்தகத்தின் முதன்மை மருந்துவ அதிகாரி மருத்துவர் .ஸ்ரீலதா ஆகியோர்களுக்கு எங்கள் சம்மேளனத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு ஆர்.கே.செல்வமணி தெரிவித்திருக்கிறார்.