அமேசான் பிரைமில் அனைத்து வயதினரும் பார்க்க ஏற்ற வகையில் இருக்கும் சீரீஸ்களில் ஒன்று Laakhoon Mein Ekமெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் மஹாராஷ்ட்ரத்தில் இருந்து வந்து தமிழ் மக்களின் நெஞ்சத்தில் சர்க்கஸ் இட்ட வெள்ளாட்டு கண்ணழகி வெண்ணைக்கட்டி பல்லழகி ஸ்வேதா திரிபாதி நடித்து சக்கபோடு போட்ட வெப்சீரீஸ் தான் Lakhoon Mein Ek - Season 2 லட்சத்தில் ஒன்று. லட்ச உயிர்கள் இருக்கும் ஒரு தேசத்தில் அந்த லட்சத்தின் ஒருவனாகவோ, ஒருத்தியாகவோ இருந்து அந்த லட்ச உயிர்களுக்காகக் குரல் கொடுக்கும் மனிதாபிமானத்தைத் தூக்கிப் பிடித்துக் காட்டும் கதையம்சம் தான் இந்த சீரீஸின் ப்ளஸ்.
இன்றிருக்கும் மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் ஓரளவிற்குப் பாராட்டும் விதத்தில் உள்ளது. ஆனால் இந்தியத் தேசம் முழுக்க இது சமத்துவமாக இல்லை. ஏழை மக்கள் அதிகம் வாழும் கிராமப்புறங்களில் இன்னும் மருத்துவமனைகள் சென்றடைந்தாலும், அலோபதி மருத்துவம் குறித்த விழிப்புணர்வு சென்றடையவில்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது Laakhoon Mein ekஸ்வேதா திரிபாதி 35 வயது ஆனாலும் கல்லூரியின் முதல் வருட மாணவி போல அவரது தோற்றம் கதைக்கு வசீகரத்தைத் தருவதோடு, அவரது யதார்த்த நடிப்பு அழகையும் தாண்டி அவரிடம் இருக்கும் நடிப்பை, பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது. மஹாராஷ்ட்ராவின் சித்திர கதைகளுக்குப் பெயர் போன சிட்லாபூர் அதைச் சுற்றி வசிக்கும் கிராம மக்கள், அங்கே கண்சிகிச்சை முகாமுக்குச் செல்லும் மருத்துவரான ஸ்வேதா, இவர்களுக்குள் சுழலும் மென்மையான சமுதாய சிந்தனை மேலோங்கிய கதையை அழகாக வடிவமைத்துள்ளார்கள் அதன் இயக்குனர்கள்.
வாழ்வில் எப்போதுமே Comfort Zone க்குள் இருந்தே கம்பு சுற்ற முடியாது. களம் எவ்வளவு கடினமாக இருந்தாலும் சாதிக்க வெறி உள்ளவர்களுக்கெல்லாம் வழிகள் உண்டு என்று சொல்லாமல் சொல்கிறது Laakhoon Mein Yekh அதிகார துஷ்பிரயோகம், மருத்துவத் துறையில் நிரம்பி வழியும் ஊழல், கொடிகட்டிப் பறக்கும் அரசியல் லாப நோக்கு, மருந்து மாஃபியா என சீரீஸ் தொட்ட விசயங்கள் எல்லாவற்றிலும் மக்களின் நலத்தைச் சுரண்டுவதை வெளிச்சம் போட்டுக் காட்டுவது, சோசியல் டச்வெள்ளாட்டு கண்ணழகி ஸ்வேதா இந்திய சினிமாவை ஒரு ரவுண்டு வந்து கலக்கப் போகிறார் என்பது திண்ணம்.நடிகர்களின் வாரிசுகள் எளிதில் அமரும் கதாநாயகி சிம்மாசனத்தில் அரசு ஊழியர்கள் குடும்பத்தில் இருந்து வந்து கதாநாயகியாக மிளிர்ந்துள்ள ஸ்வேதாவை கொண்டாடலாம். தவறே இல்லை....