வசந்தகுமார் எம்பி மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்.. பிரபல இயக்குனர் வீரவணக்கம்..

Rajinikanth, Director Suseendran Condolence To Vasathakumar MP

by Chandru, Aug 29, 2020, 18:45 PM IST

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் நேற்று மாலை காலமானார். இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனில்லாமல் பலியானார்.
அவரது மறைவுக்குக் காலை முதலே பல அரசியல் தலைவர்களும். திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .

தற்போது வசந்தகுமார் எம்பி மறைவுக்கு ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் அதில் கூறியிருப்பதாவது: அருமை நண்பர் வசந்தகுமாரின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அதேபோல் வெண்ணிலா கபடி குழு இயக்குனர் சுசீந்திரன் வசந்தகுமாருக்கு வீரவணக்கம் செலுத்தி உள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: மக்கள் நலப்பணியில் ஈடுபட்டு கோவிட்19ஆல் உயிர் நீத்த நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் அவர்களுக்கு, எனது வீரவணக்கத்தை செலுத்திக்கொள்கிறேன். அய்யா அவர்களைப் பிரிந்து வாடும் எங்கள் கலைத்துறையைச் சார்ந்த விஜய் வசந்த் நண்பர்க்கும், தொண்டர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை கூறிக்கொள்கிறேன்.
இவ்வாறு இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்திருக்கிறார்.

More Cinema News

READ MORE ABOUT :