பிரபுதேவா ஜோடி நடிகையின் கொரோனா தொற்று அனுபவங்கள்.. சுவை மற்றும் வாசனையின் உணர்வை முற்றிலுமாக இழந்துவிட்டேன்

பிரபுதேவாவுடன் சார்ளி சாப்லின்2 , ஜீவி பிரகாஷுடன் டார்லிங் உள்ளிட்ட பல்வேறு ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருப்பவர் நிக்கி கல்ராணி. இவர் சில வாரங்களுக்கு முன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானார். சிகிச்சைக்கு பிறகு தற்போது குணம் அடைந்திருக்கிறார். தான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை நடிகையாக இருந்தாலும் அதை மறைக்காமல் தைரியமாக அறிவித்தார். முன்னதாக அவர் லேசான அறிகுறிகள் தென்பட்ட போது வீட்டில் சுய-தனிமைப் படுத்திக்கொண்டார், அலோபதி சிகிச்சையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். பூரண குணம் அடைந்த நிலையில் 2 வாரங்களுக்குப் பிறகு ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் கூறியது: நம்மில் யாருக்குமே கடந்த இரண்டு மாதங்கள் கடந்த வந்தது எளிதான காரியமாக அமையவில்லை. கோவிட் -19 காரணமாக மக்களிடையே பயமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. எனவே, எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தேன். எனக்குக் காய்ச்சல், தொண்டை வலி மற்றும் லேசான அறிகுறிகள் இருந்தன. தலைவலி, இவை அனைத்தும் சுமார் 5-6 நாட்கள் நீடித்தன. சுவை மற்றும் வாசனையின் உணர்வை நான் முற்றிலுமாக இழந்துவிட்டேன். உடனடியாக பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொண்டேன். இது சுமார் 12 நாட்கள் நீடித்தது. இது படிப்படியாக இயல்பு நிலைக்கு வந்தது. நான் எப்படி வைரஸால் பாதிக்கப்பட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்கு அறிகுறிகள் வந்தவுடன், நான் பரிசோதித்துக் கொண்டேன்.பொதுவாக கொரோனா பரிசோதனை செய்ய மக்கள் பயப்படுகிறார்கள். அவர்களின் பயம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை - அவர்கள் 14 நாட்களுக்கு கொரோனா பாசிடிவாக இருப்பார்கள் என்பதா அல்லது தனிமைப்படுத்துவார்கள் என்ற பயமா என எனக்குப் புரியவில்லை. ஆனால் அந்த சிகிச்சை சிலர் எண்ணுவதுபோல் மோசமாக இல்லை.

உங்களிடம் உங்கள் மொபைல் போன், டிவி உள்ளது, உங்கள் அன்புக்குரியவர்களுடன் தினமும் பேசலாம் ஆனால் உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால், தயவு செய்து அதைச் சரிபார்க்கவும். கொரோனா வைரஸுக்கு பாசிடிவாக நீங்கள் சோதித்தவுடன், சரியான வழியில் சிகிச்சை பெறுங்கள். இளைஞர்கள், மற்றும் ஃபிட்டானவர்கள் மருத்துவ பிரச்சினைகள் இல்லாதவர்கள் இதன் மூலம் எளிதாக வெளி வரமுடியும். ஆனால் வயதானவர்களை நினைவில் கொள்ள வேண்டும் சில வயதானவர்கள் கொரோனா பரிசோதனை என்றதும் கூச்சலிடும் நபர்களைக் பற்றி அறிந்தேன். அவர்கள் நோய்த் தொற்றின் தீவிரத்தை உணரவில்லை என்பதும் வீட்டிலிருந்துக் கொண்டு அதைப் பரப்புகிறார்கள். என்று தெரிகிறது.யார் ஒருவரும் சுய மருத்துவம் செய்யக் கூடாது. நாங்கள் அனைவரும் மருந்துகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆம். ஆனால் அது வேறுபடுகிறது. மருந்துகளை சுயமாகப் பரிந்துரைக்காதீர்கள். உங்கள் மருத்துவரை அணுகவும். மருத்துவர்கள் நாள் முழுவதும் உள்ளேயும் வெளியேயும் வேலை செய்கிறார்கள். அதற்கான பணியில் இடை விடாமல் உழைத்து வருகிறார்கள், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளியையும் ஒவ்வொரு நாளும் சந்திக்கிறார்கள்.
நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போது உங்கள் அன்பையும், பாசிடிவான எண்ணங்களையும் என் மீது காட்டியதற்காக அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இவ்வாறு நிக்கி கல்ராணி கூறினார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :