மலையாளத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி மிகவும் பரபரப்பாக ஓடிய படம் 'அஞ்சாம் பாதிரா'. சஸ்பென்ஸ் திரில்லரான இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன், ரம்யா நம்பீசன் உண்ணி மாயா மற்றும் பலர் நடித்திருந்தனர். மலையாளத்தில் இந்த ஆண்டின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான இது வசூலை வாரி குவித்தது.
இந்நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் எடுக்கப்போவதாக இதன் டைரக்டர் மிதுன் மேனுவல் தாமஸ் தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்டுடன் மலையாள தயாரிப்பாளரான ஆஷிக் உஸ்மானும் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்தியில் யார் யார் நடிக்கின்றனர் என்ற விவரங்கள் தற்போது வெளியிடப்படவில்லை. கூடுதல் தகவல்களைத் தானே விரைவில் வெளியிடப் போவதாக மிதுன் மேனுவல் தாமஸ் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இவர் மலையாளத்தின் பிரபல இயக்குனர் அன்வர் ரஷீதுடன் சேர்ந்து தமிழிலும் ஒரு படத்தை உருவாக்கத் தீர்மானித்துள்ளார்.