தமிழில், 'மீன் குழம்பும் மண் பானையும்' படத்தில் நடித்ததுடன் பல்வேறு தெலுங்கு. கன்னட படங்களில் நடித்திருப்பவர் எஸ்தர். இவருக்கும் நடிகர், டிவி தொகுப்பாளர், பாடகருமான நோயல் ஷேன்-க்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு வருடமே ஆன நிலையில் இருவரும் விவாகரத்து செய்துள்ளனர்.
இதுகுறித்து நோயல் கூறும் போது,' நீண்ட நாட்களாக நான் அமைதியாகவே இருந்து வந்தேன் தற்போது இதனை அறிவிக்கிறேன். எங்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் பிரிந்து விட்டோம். கோர்ட் முடிவுகளுக்குப் பிறகு அறிவிப்பது தான் முறை. என்பதால் இப்போது இதைத் தெரிவிக்கிறேன் ' என்றார்.
நடிகை எஸ்தர் கூறும்போது,'நானும் நோயாலும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்தோம். சில நாட்களில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.. இருவரும் சட்டப்படி பிரிவது என முடிவு செய்தோம். அதன்படி அதே ஆண்டு ஜூன் மாதம் கோர்ட்டில் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்தோம். தற்போது எங்களுக்கு விவாகரத்து கிடைத்திருக்கிறது என்றார்.