ஆச்சரியப்படுத்தும் தி சேஸ் ஃபர்ஸ்ட் லுக்.. படக்குழுவினர் 28 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது..

ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்பது மிகவும் முக்கியம். அது தான் ஒவ்வொரு படத்தின் கதைகளம், நடிகர்களின் லுக் ஆகியவற்றை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும். ஆனால், இதில் ஒரு சில ஃபர்ஸ்ட் லுக் தான் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும். அப்படியொரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக அமைந்துள்ளது 'தி சேஸ்' கார்த்தி ராஜு இயக்கத்தில் ரைசா வில்சன், ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், குழந்தை மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறைந்த நடிகர்களை வைத்துக் கொண்டு பலம் வாய்ந்த தொழில் நுட்பக் குழுவினருடன் 'தி சேஸ்' உருவாகியுள்ளது. இதற்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன், இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக சாபு ஜோசப் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

ராஜ்சேகர் வர்மா தயாரித்துள்ளார். இந்நிறுவனத்துக்காக கார்த்திக் ராஜு இயக்கி வரும் 'சூர்ப்பணகை' திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 'தி சேஸ்' பணிகளை முடித்து விட்டு, 'சூர்ப்பணகை' படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.'தி சேஸ்' கதைக்களத்துக்குத் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பொருத்தமான இடமாக இருந்ததால், அங்கேயே ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டுத் திரும்பியுள்ளது படக்குழு. படப்பிடிப்புக்கும் முன்பும், பின்பும் நடிகர்கள், படக்குழுவினர் உட்பட 28 பேருக்கும் கோவிட் 19 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஒரு இளைஞர் ஆகியோரை பற்றிய படம். ஒரே இரவில் நடக்கும் கதையும் கூட. படம் பார்ப்பவர்களை ஆச்சரியமூட்டும் வகையில் இந்தக் கதையை உருவாக்கியுள்ளார் கார்த்திக் ராஜு. நல்ல காமெடி, சண்டைக் காட்சிகள், எமோஷன் காட்சிகள் எனப் பார்வையாளர்களை இந்தப் படம் கட்டிப் போட்டுவிடும் என்று உறுதியாக நம்பலாம் என்கிறது படக்குழு.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
Tag Clouds

READ MORE ABOUT :