பூங்காவில் அரைகுறை நடனம் ஆடிய நடிகை மீது தாக்குதல்.. பார்க்கிலிருந்து பொதுமக்கள் விரட்டியடித்தனர்..

by Chandru, Sep 5, 2020, 10:24 AM IST

நடிகர் ஜெயம் ரவி நடித்த கோமாளி; மற்றும் பப்பி, வாட்ச்மேன்; போன்ற தமிழ்ப் படங்கள் மற்றும் பல்வேறு கன்னட படங்களில் நடித்திருப்பவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் நேற்று பெங்களூரூவில் உள்ள ஒரு பார்க்கில் ரோப் எனப்படும் இடுப்பில் வளையம் மாட்டிக்கொண்டு சுழன்று நடனம் ஆடும் பயிற்சி செய்துக் கொண்டிருந்தார். அதற்காக லெகின்ஸ் மற்றும் உள்ளாடை மட்டும் அணிந்திருந்தார். நடிகையுடன் அவரது தோழிகள் இருவரும் வந்திருந்தனர். பொது இடத்தில் அரைகுறை ஆடையுடன் சம்யுக்தா ஆடிய இந்த நடனம் பார்க்கில் இருந்தவர்களை தர்ம சங்கடத்துக்குள்ளாகியது.

இந்நிலையில் ஒரு பெண்மணி சம்யுக்தாவைத் தட்டிக்கேட்டார். பொது இடத்தில் இப்படி அரைகுறை ஆடையுடன் இருக்கக் கூடாது உடனே புறப்பட்டு செல்லுங்கள் என்றார். அதற்கு சம்யுக்தா மறுப்பு தெரிவித்தார். இதனால் வாக்கு வாதம் ஏற்பட்டது. அங்கு இளைஞர்கள் பலர் கூடினார்கள். சம்யுக்தா சத்தம் போட்டபடி அவர்களை விரட்டினார். உடனே அந்த பெண்மணி சம்யுக்த்தாவின் தோழியை தாக்கப் பாய்ந்தார். இதனால் தகராறு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசாரும் வந்தனர். சம்யுக்தாவை இளைஞர்களும் விரட்டத் தொடங்கினர். ஆனால் விடப்பிடியாக சம்யுக்தா அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ஒரு இளைஞர், ஆடை அணியாமல் பொது இடத்தில் இப்படி ஆபாசமாக இருக்கக்கூடாதது என்றார்.

உடனே சம்யுக்தா. நான் ஆடை அணியாமல் இல்லை என்று உள்ளாடை, பேண்ட் அணிந்திருக்கிறேன் என்று தான் அணிந்திருந்த டி ஷர்ட்டை கழற்றி காட்டினார். இது மேலும் அங்கிருந்தவர்கள் கோபத்தில் ஆழ்த்தியது. மோதல் முற்றிய நிலையில் சம்யுக்தாவை அங்கிருந்தவர்கள் சூழ்ந்துக் கொண்டு விரட்டத் தொடங்கினார். அவர் பார்க்கிலிருந்து வெளியேற முயன்றபோது யாரோ ஒருவர் பார்க் கதவுகளைப் பூட்டி இருந்தார். இதனால் வெளியில் செல்ல முடியாமல் தவித்த சம்யுக்தா, ரவுடிகள் போல் நடந்துக் கொள்கிறார்கள். யாராவது கேட்டை திறங்கள் என்று கேட்டபடி இருந்தார். நீண்ட நேரத்துக்குப் பிறகு ஒருவர் கேட்டை திறந்து விட்டார். அதன்பிறகு சம்யுக்தா அங்கிருந்து வெளியேறினார்.நடந்த சம்பங்கள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்து அதைத் தனது இன்ஸ்டாகிராமில் சம்யுக்தாவே பகிர்ந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் 1 மணி நேரத்துக்கும் மேலாகப் பரபரப்பை ஏற்படுத்தியது.


More Cinema News

அதிகம் படித்தவை