ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் பாடலுக்கு ரசிகரான சூப்பர் ஸ்டார். சிவகார்த்திகேயன் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

by Chandru, Sep 5, 2020, 17:08 PM IST

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஊதா கலரு ரிப்பன் என்ற பாடல் அப்படம் வெளியான போதே பெரிய ஹிட் பாடலாக அமைந்தது. இதில் ஹீரோயினாக ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார். படம் முழுக்க நகைச்சுவை பின்னணியில் காதல் கதையாக உருவானது, இதில் பிரதான வேடத்தில் சத்யராஜ், சூரி ஆகியோர் நடித்திருந்தனர். பொன் ராம் இயக்கினார்.உன் தமிழுக்கு நான் அடிமை என்று சிவாஜி ஒரு படத்தில் வசனம் பேசுவார். அதுபோல் சிவகார்த்திகேயனின் ஊதா கலரு ரிப்பன்; பாடலுக்கு நான் அடிமை என்று தெலுங்கு பட சூப்பர் ஸ்டார் கூறி உள்ளார்.

இது குறித்து நடிகர் பவன் கல்யாண் தனது சமூக வலைத் தள பக்கத்தில், உங்கள் படத்தில் இடம்பெற்ற ஊதா கலர் ரிப்பன் பாடலுக்கு அடிமை. அந்த பாடலை பலமுறை நான் கேட்டிருக்கிறேன். எத்தனை தடவை கேட்டுள்ளேன் என்று எனக்கே தெரியாது. உங்களுக்கு இனிய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஒருவர் தனது பாடலுக்கு ரசிகன் என்று கூறியதைக் கண்ட சிவகார்த்திகேயன் குஷியானார். அவருக்குப் பதில் தெரிவித்தவர், ஊதா கலர் ரிப்பன் பாடலுக்கு ரசிகர் என்று கூறியதற்கு மிகவும் நன்றி எனப் பதில் அளித்தார் சிவகார்த்திகேயன்.


More Cinema News

அதிகம் படித்தவை